Voice of Global South Summit: "வாய்ஸ் ஆஃப் குளோபல் சவுத் உச்சி மாநாடு" என்ற இரண்டு நாள் மாநாட்டினை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. ஜனவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் நடந்த மாநாட்டில், தொடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். முதல் நாளில் தலைவர்கள் பங்கேற்ற அமர்வுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இரண்டாம் நாள் நிகழ்வில்மாநாட்டில் பேசிய உஸ்பெகிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஷவ்கத் மிர்சியோயேவ், “மனிதனை மையமாகக் கொண்ட வளர்ச்சி”என்ற தலைப்பில் பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

’ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற உலகளாவிய யோசனைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் தெளிவான நிரூபணம் இந்த மாநாடு என்று தெரிவித்தார்.  இந்த மாநாடு, இந்தியாவின் G20 தலைவர் பதவியின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நம்புவதாக தெரிவித்த அவர், இந்தியாவின் சர்வதேச செல்வாக்கு, பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் திறன்கள் வளர்ந்து வருவதை குறிப்பிட்டு பேசினார்.


’இன்று, உலக சமூகம் பல்வேறு முரண்பாடுகள் மற்றும் மோதல்களின் தீவிரத்தையும் பொருளாதார நெருக்கடியின் எதிர்மறையான விளைவுகளையும் எதிர்கொள்கிறது. சர்வதேச உறவுகளில் வெளிப்படையான உரையாடல் மற்றும் பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருவதை நாம் காண்கிறோம். கொரோனா வைரஸ் தொற்று, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்சினைகள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவை உலகளாவிய வளர்ச்சி வாய்ப்புகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய சவாலான சூழலில், உலகின் தெற்குபகுதியில் இருக்கும் நாடுகள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் பல புதிய தடைகள்  எழுகின்றன’ என உஸ்பெகிஸ்தான் குடியரசுத் தலைவர் கவலை தெரிவித்தார்.


மேலும் படிக்க | Budget 2023: சாமானியர்களுக்கு பம்பர் பரிசு, காப்பீட்டு வரிமுறையில் மாற்றம்?


ஐக்கிய நாடுகள் சபையின் முக்கியக் கொள்கையான “யாரையும் விட்டுவிடாதீர்கள்” என்பது மிகவும் பொருத்தமானதாகி வருகிறது என்று கூறிய ஷவ்கத் மிர்சியோயேவ், இந்தக் கட்டத்தில், வளரும் நாடுகளுடன் பரஸ்பர நன்மை மற்றும் உற்பத்தி உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் தீவிர பங்கை வலியுறுத்த விரும்புவதாக தெரிவித்தார்.


சமீபத்திய ஆண்டுகளில், உஸ்பெகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மை மற்றும் நடைமுறை ஒத்துழைப்பு உறவுகள் முற்றிலும் புதிய நிலைக்கு உயர்ந்து, மக்களின் பொதுவான நலன்களுக்கு உதவுவதாக ஷவ்கத் மிர்சியோயேவ் தெரிவித்தார். இன்று, பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் உஸ்பெகிஸ்தானில் செயல்படுத்தப்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  


மனிதர்களின் கண்ணியத்தைக் காப்பது மற்றும் மக்களுக்கு நலன்களை வழங்குவது நமது கொள்கையின் முக்கிய குறிக்கோள் மற்றும் நோக்கம் என்று தெரிவித்த ஷவ்கத் மிர்சியோயேவ், அபிவிருத்தி மூலோபாயத்தின் சாராம்சம் என்பது, சட்டத்தின் ஆட்சியை நிறுவுதல் மற்றும் மனித மூலதனத்தை மேம்படுத்துதல், நியாயமான மற்றும் வலுவான சிவில் சமூகத்தை உருவாக்குதல் என்று சுட்டிகாட்டினார்.


எதிர்காலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை அடையவும், நாட்டில் வறுமையை பாதியாக குறைக்கவும் பெரிய திட்டத்தை வகுத்துள்ளதாக கூறிய ஷவ்கத் மிர்சியோயேவ், இந்த நோக்கங்களை அடைய, உஸ்பெகிஸ்தானில் 2023 ஆம் ஆண்டு "மனிதர்கள் மீதான அக்கறை மற்றும் தரமான கல்விக்கான ஆண்டாக" அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | Makar Sankranti: மகர சங்கராந்தி ராசிபலன்கள்: சமூக அந்தஸ்து அதிகரிக்கும் ராசிகள்


நவீன கல்வி மற்றும் தொழில்களுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான அனைத்து நிலைமைகளும் உஸ்பெக்கிஸ்தானில் உருவாக்கப்படுவதாக தெரிவித்த அவர், மக்களின் பயனுள்ள சமூகப் பாதுகாப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது என்றும், தகுதியான மற்றும் உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்  சீர்திருத்தங்களைத் தொடர, சர்வதேச நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைக்க எப்போதுமே தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஜி 20 தலைமை, அதன் முன்னுரிமை இலக்குகள் மற்றும் உன்னத அபிலாஷைகளை உஸ்பெகிஸ்தான் பாராட்டுவதாகவும், ஆதரிப்பதாகவும் அந்நாட்டு குடியரசுத் தலைவர் தெரிவித்தார். 


இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டிருந்த விஷயங்கள் குறித்த நடைமுறை முன்மொழிவுகளை தெரிவித்த ஷவ்கத் மிர்சியோயேவ், தற்போதுள்ள சர்வதேச வர்த்தக முறையை மேம்படுத்த வேண்டும் என்பது காலத்தின் தேவை என்று கூறினார்.


இந்த செயல்பாட்டில், "உலக நாடுகளில் தெற்கின் குரல்" கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் - வளரும் நாடுகன் திறனைத் தடுக்க தேவையான நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். துரதிர்ஷ்டவசமாக, உலகின் தெற்குபகுதியில் இருக்கும் நாடுகள் பெரிய சந்தைகளில் நுழைவதில் இன்னும் பல்வேறு சிரமங்களையும் கட்டுப்பாடுகளையும் எதிர்கொள்கின்றன என்று ஷவ்கத் மிர்சியோயேவ் கவலை தெரிவித்தார்.


மேலும் படிக்க | வரி மோசடி செய்த டொனால்ட் டிரம்பின் நிறுவனங்களுக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம்


உலகின் தெற்குபகுதியில் இருக்கும் நாடுகளின் தொழில்துறை மற்றும் விவசாயத் திறனையும், அவற்றின் பெரிய உள்நாட்டுச் சந்தைகளையும் கருத்தில் கொண்டு, உலக அளவில் நியாயமான போட்டிச் சூழலை உருவாக்குவதற்கான பொதுவான அணுகுமுறைகளை உருவாக்குவது முக்கியம் என்று ஷவ்கத் மிர்சியோயேவ் கேட்டுக் கொண்டார். 


வளரும் நாடுகளின் ஆற்றல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், உலகளாவிய தளவாடங்கள் மற்றும் மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குதல், முதலீட்டை ஈர்ப்பதில் உதவி மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவை உலக உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் அடங்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 


"வடக்கு-தெற்கு" சர்வதேச காரிடார் வளர்ச்சியை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்த அவர், இது யூரேசிய பிராந்தியத்தின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்று என்பதைக் குறிப்பிட்டார். மத்திய மற்றும் தெற்காசியாவின் இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியப் பெருங்கடலுக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை ஊக்குவித்து வருவதை ஷவ்கத் மிர்சியோயேவ் சுட்டிக்காட்டினார். 


இந்த மிக முக்கியமான திட்டத்தை செயல்படுத்துவதில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுத்த ஷவ்கத் மிர்சியோயேவ், "பசுமைப் பொருளாதாரத்திற்கு" மாறும்போது, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய தொழில்நுட்ப இடைவெளி அதிகரித்து வருவதாக பகுப்பாய்வு காட்டுகிறது என்பதை சுட்டிககாட்டினார். 


மேலும் படிக்க | 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கான இழப்பீடு! அந்நாள் அதிபர் சிறிசேன வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


உலகின் முன்னணி நாடுகளின் ஆதரவுடன்   "பசுமை தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு தரவுத்தளத்தை" உருவாக்க இதுதான் உகந்த நேரம் என்று நம்புவதாக தெரிவித்த உஸ்பெகிஸ்தான் குடியரசுத் தலைவர், மனித மூலதனத்தின் வளர்ச்சி மற்றும் தொழில்முறை கல்வியின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை, அடுத்த அவசரப் பிரச்சினை என்று குறிப்பிட்டார்.


கல்வித்துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் உஸ்பெக்கிஸ்தான் ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டு குடியரசுத் தலைவர் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.


"மனிதர்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி" என்ற சூழலில், இளம் தலைமுறையினருக்கு கல்வி கற்பிப்பது முக்கிய இடத்தைப் பெற வேண்டும் என்றும், பருவநிலை மாற்றம், நீர் ஆதாரங்களை முறையாக பயன்படுத்துவது, மாற்று ஆற்றல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பிற முன்னுரிமைப் பகுதிகளில் தேசிய மற்றும் சர்வதேச திட்டங்களை மேம்படுத்துவதில் திறமையான இளைஞர்களை பரவலாக ஈடுபடுத்த உஸ்பெகிஸ்தான் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக, அந்நாட்டு குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் போதும்! மாதம் ரூ.20,000 வரை ஓய்வூதியம் பெறலாம்!


இது சம்பந்தமாக, உலகின் தெற்குபகுதியில் இருக்கும் நாடுகளின் உரையாடலுக்கான தளமாக "இளைஞர்களின் குரல்" (Voice of the Youth) அமைக்கலாம் என ஷவ்கத் மிர்சியோயேவ் பரிந்துரைத்தார்.


இன்று உலகில் அதிகரித்து வரும் பல்வேறு மோதல்களின் எதிர்மறையான விளைவுகள் வளரும் நாடுகளில் முதன்மையாக உணரப்படுவதாக தெரிவித்த அவர், "புத்தர் மற்றும் மகாத்மா காந்தியின் பூமி" என அழைக்கப்படும் இந்தியாவின் ஜி20 தலைமையின் கீழ், உலக அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான புதிய முன்மொழிவுகள் மற்றும் யோசனைகள் உலகிற்கு முன்வைக்கப்படும் என்று நம்புவதாக தெரிவித்தார்.


ஆப்கானிஸ்தானின் பிரச்சனைக்கு தீர்வு காண சர்வதேச உரையாடல் குழு ஒன்றை உருவாக்கும் முன்மொழிவை அனைவரும் ஆதரிப்பார்கள் என உறுதியாக நம்புவதாக தெரிவித்த ஷவ்கத் மிர்சியோயேவ், உஸ்பெகிஸ்தானும் இந்த திசையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். 


சர்வதேச அளவில் வளரும் நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் தீவிர முயற்சிகளை தாங்கள் எப்போதுமே ஆதரித்து வருவதாகக் கூறிய அவர், சந்தேகத்திற்கு இடமின்றி, இன்று வெளிப்படுத்தப்படும் அனைத்து முன்மொழிவுகளும் முன்முயற்சிகளும் மக்களின் நலன்களுக்கும் நிலையான வளர்ச்சியின் இலக்குகளுக்கும் உதவும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.


இறுதியாக, இந்திய குடியரசு தின வாழ்த்துக்களையும் உஸ்பெகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஷவ்கத் மிர்சியோயேவ் தெரிவித்துக் கொண்டார்.


மேலும் படிக்க | நித்தியானந்தாவின் கைலாசாவுடன் ஒப்பந்தம் போட்டதா அமெரிக்கா? ஒப்பந்தத்தால் என்ன பயன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ