எச்சரிக்கை! கொரோனா இன்னும் போகவில்லை, புதிய ஆபத்து வருது
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கொரோனா வைரஸ் குடும்பத்தின் வேறு ஒரு கிருமியிலிருந்து விரைவில் ஒரு புதிய தொற்றுநோய் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
வாஷிங்டன்: கொரோனா நெருக்கடி இன்னும் முடிவடையவில்லை, இதற்கிடையில் உலகம் மற்றொரு தொற்றுநோய் அபாயத்தில் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், விரைவில் கொரோனா போன்ற மற்றொரு தொற்றுநோய் உலகைத் தாக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கை மக்களிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. கோவிட்-19 இலிருந்து கடுமையாக நோய்வாய்ப்படும் ஆபத்து வியத்தகு அளவில் குறைந்துள்ளது என்று பில் கேட்ஸ் கூறினார். ஏனென்றால், இந்த வைரஸுக்கு எதிராக மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக அதிகரித்து உள்ளது.
புதிய எச்சரிக்கை
சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில், பில் கேட்ஸ், எதிர்கால தொற்றுநோய்கள் கொரோனா வைரஸ் குடும்பத்தின் வேறுபட்ட கிருமியிலிருந்து வரக்கூடும் என்று கூறினார். இருப்பினும், மருத்துவ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் உதவியுடன், உலகம் அதை சிறந்த முறையில் சமாளிக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஓமிக்ரான் எலியிலிருந்து வந்ததா? சீன விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில் பகீர் தகவல்கள்
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் மோசமான விளைவுகள் ஏற்பட்டது. தற்போது இந்த தொற்று குறைந்து வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனர் தெரிவித்துள்ளார். உலகளாவிய மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக உருவாக்கப்பட்டதால் தொற்று பரவல் குறைந்துள்ளது என்றார்.
துணை மாறுபாடு பிஏ.2 சிக்கலை ஏற்படுத்தியது
வைரஸ் தொற்று பற்றி பேசுகையில், இந்தியாவில் தொற்று எண்ணிக்கைகள் குறைந்து வருகின்றன, ஆனால் உலகின் சில நாடுகளில், ஓமிக்ரான் இன் துணை மாறுபாடு பிஏ.2 உருவாகி உள்ளது. பிஏ.2 அசல் மாறுபாட்டை விட வேகமாக பரவப் போகிறது என்பது பல ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இதனுடன், ஓமிக்ரான் துணை மாறுபாடு பிஏ.2 டெல்டாவை விட ஆபத்தானது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஓமிக்ரான் அறிகுறிகள்: தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களில் வேறுபடுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR