புதுடெல்லி: உலகெங்கிலும் வடகொரியாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான கிம் யோ ஜாங்கின் நிர்வாண புகைப்படங்களைத் தேடுவதைக் கண்டு அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூகுள் ட்ரெண்ட்ஸஸின் தகவல்களின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 'Kim Yo Jong Nude' என்ற விஷயம் அதிக அளவில் தேடப்பட்டிருக்கிறது. வேறு சிலரோ, கிம் யோ ஜாங்கின் கால்களைத் தேடி வருகின்றனர். இந்தியாவில், அரசியல்வாதியின் 'Kim Yo Jong hot photos' என்ற தேடல் கூகுளில் அதிகமாக காணப்படுகிறது.  இதன் பின்னணி என்ன?


கிம் யோ-ஜாங், வடகொரியாவின் தற்போதைய அதிபர் Kim Jong-Unஇன் இளைய சகோதரி. பரம்பரையாக வடகொரியாவில் ஆட்சியில் இருக்கும் கிம் குடும்பத்தின் அரசியலில் ஆர்வம் காட்டும் பெண். மிதவாத அணுகுமுறை உள்ள கிம் யோ ஜோங், புத்திசாலி என்றும் அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.


 டிரம்ப் - கிம் சந்திப்பு நடந்தபோது, முக்கியமான பங்காற்றிய கிம் யோ ஜோங், ஹனோயில் நடைபெற்ற மாநாட்டிலும் கவனிக்கப்பட்டார். ஆனால் பிறகு அவர் தற்காலிகமாக பதவி இறக்கம் செய்யப்பட்டார். ஆட்சி நிர்வாகத்தின், அரசாங்க விவகார ஆணையத்தில் அவர் இடம் பெறவில்லை.


பொலிட் பீரோவில் மாற்று உறுப்பினராகவும் இருக்கும் இந்த வடகொரியாவின் நம்பிக்கை நட்சத்திரம், கொரிய உழைப்பாளர் கட்சியின் கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவின் துணை இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார். கொள்கைபரப்பு மற்றும் போராட்டப் பிரிவு என்பது ஆட்சி அமைப்பில் கொள்கை அளவிலான முடிவுகளை உறுதி செய்யும் அமைப்பு என்பது இந்தப் பதவியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.  


ஆணாதிக்க ஆட்சி முறை வேரூன்றி இருக்கும் வட கொரியாவில், ஒரு பெண் தலைமைப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது முக்கிய கேள்வி.  அண்மை நாட்களில் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உடல் நிலை குறித்த யூகங்களால் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அவரது சகோதரியான கிம் யோ ஜோங் தொடர்பான செய்திகளை தெரிந்துக் கொள்ள மக்கள் தேடுவது ஏற்புடையதுதான்.


ஆனால், அவருடைய நிர்வாணப் புகைப்படங்களையும், அவருடைய கால்களையும் உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிக அளவில் தேடுகிறார்கள் என்பது ஆணாதிக்க உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், பாலின அடிப்படையில் பெண் பார்க்கப்படுவதற்கும் உதாரணமாக கூகுள் டிரெண்ட்ஸ்ஸின் தரவுகள் காட்டுகின்றன.


1996 - 2000 காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் படித்தவர். வட கொரியா ராணுவத் தலைமைத் தலைவர் சூ ரியாங்-ஹோவின் இரண்டாம் மகன் சூ சாங் என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ள கிம் யோ ஜோங் வடகொரியாவின் அடுத்த அதிபராகும் வாய்ப்பு இருந்தாலும், அவர் ஒரு பெண் என்பதால் அவரது அறிவு, திறமை என்ன என்பதைப் பார்ப்பதை விட, அவரது நிர்வாணப் புகைப்படங்களையும், கால்களையும் தேடும் போக்கு, வருத்தத்தை தருகிறது.


நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? என்ற பாரதியாரின் ஆதங்கமே இந்த காலத்திலும் தொடர்வதை கூகுள் டிரெண்ட்சின் தரவுகள் காட்டுகின்றன...


Also Read | வட கொரிய அதிபர் Kim Jong Un சகோதரிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பதன் மர்மம் என்ன….!!!!