வட கொரிய அதிபர் Kim Jong Un சகோதரிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பதன் மர்மம் என்ன….!!!!

வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் எப்போதுமே ஒரு மர்மமான நபர் தான். சில மாதங்கள் முன்னதாக அவர் இறந்து விட்டதாக வந்த வதந்திகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2020, 01:41 PM IST
  • சர்வாதிகாரி கிம் ஜாங் உன் சகோதரி கிம் யோ ஜாங்கிற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
  • கிம் யோ ஜாங் இப்போது வட கொரியாவின் இரண்டாவது சக்திவாய்ந்த தலைவராக உள்ளார்.
  • கிம் ஜாங் உன்னிற்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வட கொரிய அதிபர் Kim Jong Un சகோதரிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பதன் மர்மம் என்ன….!!!! title=

வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன், இரண்டு நாட்களுக்கு முன் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார்.

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை நிலவுவதால், அனைவரும் தங்கள் செல்லமாக வளர்க்கும் நாய்களை உணவிற்காக இறைச்சிக் கூடத்தில் ஒப்படைக்க வேண்டும் என, குலை நடுங்க வைக்கும் உத்தரவை பிறப்பித்தார்.

அதன் மூலம் அவர் சர்வாதிகாரி மட்டுமல்ல கொடுங்கோலன் என்பதை மீண்டும் உலகிற்கு உறுதி படுத்தினார்.

இந்நிலையில், இன்று, Kim Jong Un சகோதரி, கிம் யோ ஜாங்கிற்கு ( Kim Yo-Jong)  கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இந்த கூடுதல் அதிகாரத்தை பெற்றிருப்பதன் மூலம் அவர் கிம் ஜாங் உன்னிற்கு அடுத்த நிலையில் அவரது சகோதரி உள்ளார்.

நாட்டில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அதை கையாள, கிம் யோ-ஜாங்கிற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, வட கொரியா கூறியுள்ளது. ஆனால், அமெரிக்கா மற்றும் தென் கொரியா தொடர்பான விவகாரங்களை கையாள 32 வயதான கிம் யோ-ஜாங்கிற்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, தென் கொரியாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னால், அவரது உடல் நிலை தொடர்பாக பல செய்திகள் வந்தன. அவருக்கு செய்யப்பட்ட இருதய அறுவை சிகிச்சையில், உடல் நிலை மோசமானதாகவும் அவர் உயிருடன் இல்லை என்பது போன்ற தகவல்கள் வந்தன.

கிம் ஜாங்-உன்(Kim Jong-un) உடல் நிலை தொடர்பாக  பரப்பபட்டு வந்த  வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், ஜூலை மாத தொடக்கத்தில் அவர் தனது தாத்தா கிம் இல் சுங்கின் (Kim Il Sung ) 26 வது நினைவு தினத்தில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க | "திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..." தாத்தா நினைவேந்தலில் தலை காட்டினார் Kim Jong un

இந்த நிலையில் தான் அவரது சகோதரிக்கு இப்போது கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டத்திலிருந்து, மீண்டு அந்த வதந்திகள் உயிர் பெற்றுள்ளன.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு  மூன்று குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது

கிம் ஜாங் உன்னின் மனைவியின் பெயர் ரி சோல் ஜூ என்று கூறப்படுகிறது. சர்வாதிகாரி கிம் ஜாங் உன் திருமணம் செய்து கொண்டதாக 2012 ல் வட கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 2008 ஆம் ஆண்டில் கிம் ஜாங் உன்னின் தந்தை மாரடைப்பால்  காலமான பிறகு, 2009 ல் அவசரமாக திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில், கிம் ஜாங் தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்தது. கொடுங்கோலன் கிம்மிற்கு இன்னும் மூன்று குழந்தைகள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. ஆனால், பொது வெளியில் அவர்கள் வந்ததில்லை.

கிம் ஜாங்கின் குடும்பத்தைப் பற்றிய மிகவும் நம்பகமான தகவல்கள் தென் கொரிய உளவுத்துறை அதிகாரிகளிடம் உள்ளன. இது மட்டுமல்லாமல், தென் கொரிய அரசு கிம் ஜாங் உனுக்கு மூன்று குழந்தைகள் இருப்பதை ஆதாரங்கள் மூலம் உறுதிபடுத்தியுள்ளது.

சாப்பிட வழியில்ல, செல்லப்பிராணிய தாங்க; குலை நடுங்க வைக்கும் கொரிய அதிபர் உத்தரவு

கிம் ஜாங் உன்னின் உடல்நலக்குறைவு காரணமாக, அவரது தங்கை கிம் யோ ஜாங் தனது மருமகனை ஆட்சியாளராக அறிவித்து, அதன் மூலம் திரைக்குப் பின்னால் இருந்து அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வார் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கிம்மின் மகனுக்கு 10 வயதுதான். அதனால், ஆட்சியில், கிம் யோ ஜாங்கின் பங்கு மிகவும் முக்கியமானது. 

Trending News