பல ஐரோப்பிய நாடுகள் ஓநாய்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன, அதற்கான காரணம் என்ன தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் போன்ற பல ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள ஓநாய்களை கட்டுப்படுத்த அழிக்கின்றன. ஸ்வீடனில் உள்ள வேட்டைக்காரர்கள் ஏற்கனவே 27 ஓநாய்களை சுட்டுக் கொன்றுள்ளனர். இது அவர்களின் வருடாந்திர இலக்காகும்.


ஃபின்லாந்து அதன் முதல் "மக்கள்தொகை மேலாண்மைக் கூட்டத்தின்" (population management cull) ஒரு பகுதியாக 20 ஓநாய்களைக் கொல்ல அங்கீகரிக்க உள்ளது.


ஸ்வீடனில், 395 என்ற எண்ணிக்கையில் இருந்த ஓநாய்களின் எண்ணிக்கை இப்போது 300 ஆகக் குறைந்துள்ளதாக வனவிலங்கு குழுக்கள் கவலை தெரிவிக்கின்றன. 


ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவரான Magnus Orrebrant, "ஓநாய்களின் எண்ணிக்கை 300-க்கு கீழே செல்லாது என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் சுவீடன் உறுதியளித்துள்ளது. குறைந்தபட்சம் 300 என்ற எண்ணிக்கை மிகவும் குறைவு என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளோம். 1,000 ஓநாய்களுக்கு மேல் வசிக்கக்கூடிய வாழ்விடங்கள் எங்களிடம் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.


ALSO READ | எங்களுக்கும் உண்டு பொங்கல்: யானையும் குதிரையும்


மறுபுறம், நார்வே இந்த குளிர்காலத்தில் அதன் 60 சதவீத ஓநாய்களைக் கொன்றுவிடும் இலக்கை நிர்ணயித்துள்ளது. நார்வே நாட்டின் 5 சதவீதம் ஓநாய் பாதுகாப்பு மண்டலமாக கருதப்படுகிறது. இருந்தாலும், இந்த குளிர்காலத்தில் பாதுகாப்பு மண்டலத்திற்குள் உள்ள ஓநாய்களில் 25 கொல்லப்படும்.


இந்த வெகுஜன படுகொலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல வன பாதுகாப்பு குழுக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்டுள்ளன. மேற்கு ஐரோப்பாவில் ஓநாய்களுக்கு எதிரான சூழலை இந்த நாடுகள் உருவாக்குவதாக வன ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


"இது ஒரு பயங்கரமான சூழ்நிலை. நோர்வேயின் நிர்வாகம், ஓநாய் கட்டுப்பாட்டை மீறுகிறது, ஓநாய்களை சுடுகிறார்கள், இது மூர்க்கத்தனமானது. ஒரு இனத்தை வேண்டுமென்றே அருகச் செய்வது கவலையளிக்கிற்து’ என்று விலங்குகள் உரிமைக் குழுவின் தலைமை நிர்வாகி சிரி மார்டின்சென் தி கார்டியன் பத்திரிகையிடம் தெரிவித்தார்.  


ALSO READ | Omicron: அறிகுறிகள் என்ன? எவ்வளவு நாட்களில் தெரியும்? முக்கிய தகவல்கள் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR