பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தாக்கலாகும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது. 

Last Updated : Mar 14, 2018, 12:41 PM IST
பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!  title=

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தாக்கலாகும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெறுகிறது. 

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை காலை 10.30 மணிக்கு கூடுகிறது. இதில், துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும், அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதாலும் பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடர், காவிரிக்காக சிறப்பு கூட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

டிடிவி தினகரன் நாளை காலை புதிய கட்சியை அறிவிக்கும் நிலையில் மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதனிடையே திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும் நாளை மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News