பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் வரப்போகுது மாற்றம்! இன்சூரன்சில் கிடுக்கிப்பிடி

Third Party Insurance: காப்பீட்டு நிறுவனங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம், அரசின் இந்த ஒரு முடிவு வணிகத்தை அதிகரிக்கும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 19, 2023, 02:59 PM IST
  • காப்பீடு தொடர்பான தகவல்களை கோரும் காப்பீட்டு நிறுவனங்கள்
  • மூன்றாம் நபர் காப்பீடு என்றால் என்ன?
  • இன்சூரன்ஸ் இன்ஃபர்மேஷன் பீரோ
பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் வரப்போகுது மாற்றம்! இன்சூரன்சில் கிடுக்கிப்பிடி title=

புதுடெல்லி: நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லோம்பார்ட் போன்ற பட்டியலிடப்பட்ட பொது காப்பீட்டு நிறுவனங்களின் வணிகம் இனிமேல் பெரிய ஊக்கத்தைப் பெறலாம். சமீபத்தில், பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் நிதிச் சேவைத் துறையுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் சில மாற்றங்களை நிறுவனங்கள் கோரியுள்ளன.

மோட்டார் இன்சூரன்ஸ் தொடர்பான கோரிக்கை 
நிதி சேவைகள் துறை (Department of Financial Services, DFS) உடனான பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் கூட்டத்தில், மோட்டார் வாகன காப்பீட்டை கண்டிப்பாக அமல்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் இன்ஃபர்மேஷன் பீரோவில் இருந்து காப்பீடு செய்யப்படாத வாகனங்களின் தரவை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள நிதி சேவைகள் துறையிடம் நிறுவனங்கள் கேட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், மோட்டார் காப்பீடு பெறுவதற்கான அழுத்தம் அதிகரிக்கும்.

நாட்டில் 30 கோடி வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு இல்லை. அத்தகைய சூழ்நிலையில், காப்பீட்டு தகவல் பணியகத்தின் தரவுகளின் உதவியுடன் சலான் வழங்குவதன் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் ஈட்ட முடியும். மூன்றாம் நபர் காப்பீடு கிடைக்காத பட்சத்தில், 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.  

மேலும் படிக்க | ULIP: 1 கல்லில் 2 மாங்காய்! நல்ல முதலீடு, இன்சூரஸ் பாதுகாப்பு கொடுக்கும் யூலிப் பாலிசி

மூன்றாம் நபர் காப்பீடு என்றால் என்ன? 
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மூன்றாம் நபர் காப்பீடு செய்வது அவசியம். இந்தக் காப்பீட்டின் கீழ், மூன்றாம் தரப்பினருக்கு பொறுப்புக் காப்பீடு கிடைக்கும். வாகனத்தினால் சாலை விபத்து ஏற்படும்போது, பிறருக்கு ஏற்படும் இழப்பு மூன்றாம் நபர் காப்பீட்டின் கீழ் ஈடுசெய்யப்படுகிறது.

இந்த விபத்தில் ஏற்படும் அனைத்து நஷ்டத்தையும் காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். மூன்றாம் நபர் காப்பீட்டின் நேரடிப் பலன், ஏதேனும் விபத்தில் இழப்பை சந்திக்கும் மூன்றாம் நபருக்கு வழங்கப்படுகிறது. அதனால்தான் இது மூன்றாம் நபர் காப்பீடு என்று அழைக்கப்படுகிறது.

வாகனம் விபத்துக்குள்ளாகும்போது, நமது வாகனத்தால், மூன்றாம் நபருக்கு ஏற்படும் இழப்பை, ஈடுசெய்வற்கான காப்பீடு என்றாலும், இந்த மூன்றாம் நபர் காப்பீட்டின் மூலம், தொலைந்துபோன வாகனத்திற்கோ, விபத்து அல்லது இயற்கையால் அழிவைச் சந்தித்த வாகனத்திற்கோ இழப்பீடு பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் வாகனச் சட்டம் 1988இன் படி, மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் என்பது கட்டாயக் காப்பீடு ஆகும். எனவே, அனைத்து வாகனங்களும் மூன்றாம் தரப்பு வாகன காப்பீடு செய்வது அவசியம். மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் பாலிசி மூலம், ₹15 லட்சம் மதிப்புள்ள தனிநபர் விபத்துக் காப்பீட்டையும் வாங்கலாம்.

மேலும் படிக்க | டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது குழப்பமா? உங்கள் மதிப்பு இதுதான்! கால்குலேட்டர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News