SEBI Recruitment 2022: செபியில் வேலைவாய்ப்பு: முதுகலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு

Recruitment 2022: செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா அதாவது செபி, வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. விண்ணப்ப நடைமுறை தொடங்கிவிட்டது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 16, 2022, 12:23 PM IST
  • செபியில் பணிபுரியும் வாய்ப்பு
  • விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 31
  • அதிகபட்ச வயது வரம்பு 30
SEBI Recruitment 2022: செபியில் வேலைவாய்ப்பு: முதுகலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு title=

SEBI Recruitment 2022: அரசு வேலைவாய்ப்புக்கு காத்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? உஙக்ளுக்கான கட்டுரை இது. செபியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வந்துள்ளது.  விண்ணப்பிக்கும் போது, ​​அவர்கள் சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (Securities and Exchange Board of India (SEBI)) தகவல் தொழில்நுட்பத் துறைக்கான அதிகாரி கிரேடு ஏ (உதவி மேலாளர்) பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையை தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்ளுங்கள். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  
 
செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறைக்கான அதிகாரி கிரேடு ஏ நிலையிலான உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பை தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்கும் முன், அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பிக்கவும்.

செபியின் இந்த ஆட்சேர்ப்பு நடைமுறைக்கான விண்ணப்ப நடைமுறை ஜூலை 14-ம் தேதி முதல் தொடங்கிவிட்டது. காலியிடங்களுக்கான ஆட்சேர்ர்பு நடைமுறையில் பங்கு கொள்ள விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 31 ஆகும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க | அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராக பணியாற்ற வேலை வாய்ப்பு

கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு துறையில் பொறியியல் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்  
செபியில் பணிபுரிய விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் உண்டு. பொதுப்பிரிவு, OBC மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் 1000 ரூபாய் ஆகும்.

சம்பளம் 
செபியின் A கிரேடு அதிகாரிகளின் ஊதிய விகிதம் 44500-2500(4)-54500-2850(7)-74450-EB-2850(4)-85850- 3300(1)-89150 (17 ஆண்டுகள்). 

மேலும் படிக்க | இந்தியன் வங்கியில் பணி புரிய விருப்பமா? உடனே விண்ணப்பிக்கவும்

தேர்வு நடைமுறை
SEBI ஆல் வழங்கப்பட்ட ஆட்சேர்ப்புக்கான தாள்-1 இன் கட்டம்-I தேர்வு மற்றும் கட்டம்-II ஆகஸ்ட் 27, 2022 அன்று நடத்தப்படும். அதேசமயம், இரண்டாம் கட்ட தாள்-2 தேர்வு செப்டம்பர் 24-ம் தேதி நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில் SEBI இன் sebi.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். இங்கே தொழில் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் வேலை தொடர்பான ஆட்சேர்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

பதிவு எண்ணை உள்ளிட்ட பிறகு, உங்களின் அனைத்து ஆவணங்களும் பதிவேற்றம் செய்யவும். அதன் பிறகு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நகலெடுத்து வைத்துக் கொள்ளவும். 

மேலும் படிக்க | ITI படித்தவருக்கு அணுசக்தி கழகத்தில் வேலை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News