சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பள்ளிக் கல்வித் துறை வரவேற்கிறது.
மொத்தம் 13331காலியிடங்கள் உள்ளன. உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கான புதிய அறிவிப்பை பள்ளி கல்வித் துறைத் வெளியிட்டுள்ளது. ஆனால் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
இந்த விண்ணப்ப செயல்முறை 04.07.2022 தொடங்கி 06.07.2022 வரை மட்டுமே என்பதால் உடனடியாக விண்ணப்பித்தால் வாய்ப்பு கிடைக்கும்.
தற்காலிக அரசு பள்ளி ஆசிரியர் வேலை வாய்ப்பு 2022:
மேலும் படிக்க | தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய முடிவு மற்றும் கட் ஆஃப் வெளியீடு
வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள்
நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை
பதவி பெயர்: ஆசிரியர்
வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடங்கள்: 13331
வேலை இடம்: தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை: பள்ளிகளில் நேரடியாக விண்ணப்பிக்கவும்
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.07.2022
மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு
இந்த வேலைவாய்ப்பு, தமிழ்நாடு தற்காலிக அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு 2022இன் கீழ் வருகிறது.
இந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தற்காலிக வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள நபர்கள் நீங்கள் சேர விரும்பும் பள்ளிகளில் 04.07.2022 தேதி முதல் 06.07.2022 வரை விண்ணப்பங்களை பெறலாம்.
நீங்கள் விரும்பும் பள்ளியில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளன என்பதை, பள்ளி வளாகத்தில் இருக்கும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் அறிக்கையில் இருந்து தெரிந்துக் கொள்லலாம்.
தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக நியமனம் செய்யும் ஆட்சேர்ப்பு இது.
மேலும் படிக்க | இந்திய விமானப்படையின் ஆட்சேர்ப்பு அறிவிப்பு
வயது வரம்பு குறித்த எந்தத் தகவலும் வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை, என்பதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
https://www.tnschools.gov.in/ இல் அறிவிப்பைப் பதிவிறக்கவும்
ஆன்லைன் விண்ணப்பம் 04.07.2022 முதல் 06.07.2022 வரை ஏற்றுக்கொள்ளப்படும்
எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR