யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துங்க ஆண்களே! இது ஆயுர்வேதத்தின் ஆரோக்கிய டிப்ஸ்

Ayurveda Vs Uric acid: பெண்களைவிட ஆண்களுக்கு யூரிக் அமில பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன.... எனவே, ‘அமிலத்தைக் கட்டுப்படுத்துங்க ஆண்களே’ என்று  சொல்வது சரியாக இருக்கும்...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 7, 2022, 10:58 AM IST
  • யூரிக் ஆசிட் அதிக அளவில் இருக்கும் உணவுகள்
  • அதிக யூரிக் அமிலத்தை உருவாக்கும் காரணிகள்
  • யூரிக் அமிலம் மற்றும் சிறுநீரகக்கோளாறுகள்
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துங்க ஆண்களே! இது ஆயுர்வேதத்தின் ஆரோக்கிய டிப்ஸ் title=

‘யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துங்க ஆண்களே’ என்று  சொல்வது சரியாக இருக்குமா? கண்டிப்பாக இருக்கும். ஏனென்றால் பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகே, யூரிக் அமிலத்தினால் பாதிப்பு ஏற்படும். சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால், உடலில் உருவாகும் யூரிக் அமிலம் சிறுநீராக வெளியேறிவிடும். நமது ரத்தத்தில் தேவைக்கு அதிகமாக யூரிக் அமிலம் இருந்தால் அது சிறுநீரகத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையே பாதிக்கிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகமானல், சர்க்கரை நோய், சிறுநீரக கற்கள், பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

தவறான உணவுப் பழக்கமே யூரிக் அமிலம் அதிகரிக்கக் காரணம் ஆகிறது. பியூரின் எனப்படும் புரதங்களின் அதிகப்படியான காரணமாக உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது.

மேலும் படிக்க | Uric Acid அதிகமா இருக்கா? இந்த வழியில் ஒரே மாதத்தில் கட்டுப்படுத்தலாம்

யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த எலுமிச்சை பழம் மிகச் சிறந்தது என்று சித்த வைத்தியம் பரிந்துரைக்கிறது. எலுமிச்சை சாறு குடிப்பதால், உங்கள் உடலில் கால்சியம் கார்பனேட் அதிகமாக வெளியிடப்படுகிறது. இவை யூரிக் அமிலத்துடன் பிணைந்து, அதை நீர் மற்றும் பிற சேர்மங்களாக உடைக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் அமிலத்தன்மை குறைந்து, உடலில் யூரிக் அமில அளவும் குறைகிறது.

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த, ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை சாறு குடிக்கலாம். எலுமிச்சை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க | Uric Acid:கால்களில் இந்த பிரச்சனை இருக்கா? யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கலாம் 

எலுமிச்சை சாறு, இரத்தம் மற்றும் பிற திரவங்களின் pH அளவை எலுமிச்சை அதிகரிக்கும் தன்மை கொண்டது ஆகும். அதேபோல, இனிப்பு ரொட்டி வகைகள், நெத்திலி மீன்கள், சாளை மீன்கள், கல்லீரல், மாட்டு சிறுநீரகங்கள், இறைச்சி வகைகள், வாளை மீன்கள், கானாங்கெளுத்தி மீன்கள் இவற்றில் அதிக பியூரின் உள்ளன.

இந்த உணவுகளை குறைவாகவே சாப்பிட வேண்டும். ஏனெனில் இவை அனைத்துமே, அதிக அளவு பியூரின் கொண்ட உணவுகள் ஆகும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Uric Acid இந்த வயதில் அதிரடியாய் அதிகரிக்கும்: கட்டுப்படுத்த இந்த உணவுகள் உதவும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News