Watch: ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பிரதமர் கான்வாய் - குவியும் பாராட்டு

அகமதாபாத் - காந்திநகர் சாலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆம்புலனிற்கு வழிவிட்ட காணொலி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Sep 30, 2022, 08:58 PM IST
  • மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
  • இந்த ரயில் மகாராஷ்டிரா - குஜராத் ஆகிய மாநிலங்களின் தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படுகிறது.
  • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் அதிவேகமாக ரயிலாகும்.
Watch: ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பிரதமர் கான்வாய் - குவியும் பாராட்டு title=

இரண்டு நாள்கள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்திற்கு வந்துள்ளார். இரண்டாம் நாளான இன்று, காந்திநகர் - மும்பை ஆகிய நகரங்களுக்கு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார். அதிக வேகமான ரயிலான இது, மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும். 

மேலும், அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டப்பணிகளையும் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அகமதாபாத் நகரின் தூர்தர்ஷன் மையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். தொடர்ந்து, கூட்டத்திற்கு பின் காந்திநகரில் உள்ள ராஜ் பவனுக்கு பிரதமர் சென்றுகொண்டிருந்தார். 

மேலும் படிக்க | இந்தியாவின் அதிவேக ரயிலைப் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

அப்போது, அகமதாபாத் - காந்திநகர் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அதிவேகமாக வந்தது. இதைத்தொடர்ந்து, பிரதமரின் கான்வாய்களில் இருந்த இரண்டு கார்கள் ஆம்புலன்ஸ் வருவதை கண்டு இடதுபுறத்தில் ஒதுக்கி நின்றது. இந்த வீடியோவை குஜராத் பாஜகவினரும், தனியார் செய்தி முகமை ஒன்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளன.

பிரதமர் கான்வாயின் இந்த முன்னுதாரண செயலை கண்டு சமூக வலைதளங்களிலும் பலரும் பாரட்டி வருகின்றனர். இந்த காணொலியும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குஜராத்தின் பயணத்தின் இறுதிநாளான இன்று மாலை, பனஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்பாஜி கோயிலில் ஆரத்தி நிகழ்வில் பங்கேற்கிறார்.  

மேலும் படிக்க | வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை துவக்கி வைத்து பயணித்த பிரதமர் மோடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News