CAA-க்கு எதிரான போராட்டத்தால் உ.பி.யில் இதுவரை 15 பேர் பலி; 288 போலீசார் காயம்

CAA-க்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 15 பேர் இறந்துள்ளதாகவும், 288 போலீசார் காயமடைந்துள்ளதாகவும் UP DGP தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 22, 2019, 12:31 PM IST
CAA-க்கு எதிரான போராட்டத்தால் உ.பி.யில் இதுவரை 15 பேர் பலி; 288 போலீசார் காயம் title=

லக்னோ: உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம்- சி.ஏ.ஏ- க்கு (Citizenship Amendment Act- CAA) எதிரான வன்முறை ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புக்காக போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச டிஜிபி ஓ.பி.சிங் தெரிவித்தார். இதுவரை 5000 எதிர்ப்பாளர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். CAA-க்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 15 பேர் இறந்துள்ளதாகவும், 288 போலீசார் காயமடைந்துள்ளதாகவும் டிஜிபி தெரிவித்தார்.

டிஜிபி ஓ.பி.சிங் அமைதி கோரி மாநில மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட எங்களுக்கு உதவுங்கள் என்று அவர் கூறினார். மாநிலம் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்களின் இழப்பு குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கான அபராதம் குற்றவாளிகளிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படும். அபராதத்தை செலுத்தவில்லை என்றால், நீதிமன்றத்தின் உத்தரவு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 

மாநிலத்தில் சட்டப்பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருணாமுல் காங்கிரஸ் (All India Trinamool Congress)  கட்சியை சேர்ந்தவர்கள் இங்கு வராமல் இருந்தால் நல்லது. தடை உத்தரவை மீறி அவர் வந்தால், பாதுகாப்பு காரணங்களால், அவர்களை விமான நிலையத்திலிருந்து வெளியே வர அனுமதிக்க மாட்டோம் என்று டிஜிபி ஓ.பி.சிங் கூறினார்.

 

உத்தரபிரதேசத்தில் நடந்த வன்முறையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க நான்கு டி.எம்.சி தலைவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லக்னோவுக்கு வருகிறார்கள் என்பதை உங்களுக்கு சொல்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், அவர்களை விமான நிலையத்திலேயே நிறுத்த உ.பி. காவல்துறை தயாராகி வருகிறது.

மறுபுறம், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சி.சி.டி.வி காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் அடையாளம் காணப்படுவார்கள் என்றும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். இதற்குப் பிறகு, பொது மற்றும் அரசாங்க சொத்துக்களின் மதிப்பீடு செய்யப்படும், அதன் அடிப்படையில் இழப்பை ஈடுசெய்ய குற்றவாளிகளின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். இதன் பின்னர், குற்றவாளிகளின் சொத்துக்கள் அரசாங்கத்தால் கைப்பற்றப்படும் என்று கூறியுள்ளார்.

ஊர்வலங்கள், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் பொது மற்றும் அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்டால் சேதத்தை மதிப்பீடு செய்வதற்கும், எவ்வளவு இழப்பீடு வழங்க வேண்டும் என ஆராய்வது குறித்து லக்னோ மாவட்ட அதிகாரி அபிஷேக் பிரகாஷ் 4 அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளார். 

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (Citizenship Amendment Act- CAA) எதிராக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், நாக்பூரில் குடியுரிமை சட்டத்திற்கு (CAA) ஆதரவாக ஒரு பெரிய பேரணி நடைபெற்றது. டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் (Ramlila Maidan) பிரதமர் நரேந்திர மோடிக்கு (Narendra Modi) நன்றி தெரிவிக்கும் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணியின் பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News