ஒவ்வொருவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பணம் மற்றும் முக்கியமான ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்வது முக்கியம். பெண்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு அல்லது வேலைக்கு செல்லும்போது எப்போதும் பையில் சில பொருட்களை வைத்திருக்க வேண்டும். இவை அவசரநிலைக்கு தயாராகவும் பாதுகாப்பாக இருக்கவும் உதவும். ஒரு சில பொருட்கள் பெண்களின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானவை. இன்றைய காலத்து பெண்கள் வலிமையாகவும், தங்கள் வீடு மற்றும் வேலை பொறுப்புகளை சமநிலைப்படுத்தும் திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஒவ்வொரு பெண்ணும் வெளியே செல்லும் போது சில பொருட்களை தன் பையில் வைத்திருப்பது முக்கியம், ஏனெனில் அவை தனக்கும் மற்ற பெண்களுக்கும் கடினமான சூழ்நிலைகளில் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | இந்த 7 விஷயங்களை கவனிச்சீங்கங்கனா, காதலரா இருந்தாலும் பிரிந்துவிடுங்கள்..!
எப்போதும் ஹேண்ட் பேக்கில் வைத்திருக்க வேண்டிய பொருட்கள்
பெண்கள் தங்கள் பைகளில் பாதுகாப்பு ஊசிகளை வைத்திருப்பது முக்கியம். சில சமயங்களில் நீங்கள் வெளியே இருக்கும் போது ஆடைகள் கிழிந்து போகலாம், அந்த சமயத்தில் இந்த ஊசிகள் அதனை சரிசெய்ய உங்களுக்கு உதவும். மேலும் சில சூழ்நிலைகளில் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க இந்த ஊசிகளும் பயன்படுத்தப்படலாம். அதே போல, பெண்கள் எப்போதும் தங்கள் பர்ஸில் நாப்கின்கள், டம்பான்கள் போன்றவற்றை வைத்திருப்பது நல்லது. இவை அவசர காலங்களில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களுக்கு மட்டுமின்றி உங்களுடன் இருப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
இன்றைய உலகில் பெண்களின் ஆடைகள் பல விதங்களில் மாறி உள்ளது. அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் கூட சுடிதார் மற்றும் மாடன் உடைகளை அணிகின்றனர். ஆனால் ஜீன்ஸ் போன்ற நவீன ஆடைகளை அணிந்திருந்தாலும், உங்களுடன் எப்போதும் தாவணி அல்லது துப்பட்டா வைத்திருப்பது முக்கியம். நீங்கள் அதை உங்கள் பையில் வைத்து கொண்டு தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம். அதிகமாக வெயில் அல்லது மழை பெய்யும் போது இவை பயனுள்ளதாக இருக்கும். மேலும் அவசர காலங்களில் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் ஒவ்வொரு பெண்களுக்கு சில்லி ஸ்ப்ரேவை தங்களுடன் வைத்திருப்பது சொந்த பாதுகாப்பிற்கு முக்கியமானது, ஏனெனில் நீங்கள் ஆபத்தில் இருந்தால் அது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் இவை உங்களுடன் இருப்பது பயனுள்ளதாக இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் பைகளில் எப்போதும் சில பயனுள்ள, முக்கியமான பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். உங்கள் பையில் ரப்பர் பேண்ட், லிப் பாம், மாய்ஸ்சரைசர் மற்றும் லோஷன் வைத்திருப்பது நல்லது. இந்த எளிய பொருட்கள் உங்களை புத்துணர்ச்சியடையவும் அழகாகவும் இருக்க உதவும். நீங்கள் வேலைக்கு சென்று இரவில் தாமதமாக வருபவராக இருந்தால், உங்கள் கையில் விசில் ஒன்றை வைத்து கொள்ளுங்கள். உங்களை யாராவது பின் தொடர்கிறார்கள் என்பதை உணர்ந்தால் உடனடியாக விசிலை எடுத்து சத்தமாக ஊதவும். இது சுற்றியுள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கும், உங்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ