இந்த 7 விஷயங்களை கவனிச்சீங்கங்கனா, காதலரா இருந்தாலும் பிரிந்துவிடுங்கள்..!

Relationship Tips : காதலிக்கும்போது அல்லது நண்பர்களிடத்தில் உங்களுக்கு தொடர்ச்சியாக இங்கே குறிபிடப்படும் சமிக்கைகள் கிடைத்துக் கொண்டே இருந்தால் அவர்களை விட்டு விலகிவிடுவது நல்லது.

Relationship Tips Tamil : காதலிக்கும்போது சில பிரச்சனைகள் வருவது இயல்பு என்றாலும், அந்த உறவை திருமணத்துக்கு எடுத்துச் சென்றால் சரியாக வருமா? என்ற யோசிக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது இந்த 7 விஷயங்கள் இருந்தால் அந்த உறவை நீங்கள் விட்டுவிடுவது நல்லது.

 

1 /7

எந்தவொரு உறவாக இருந்தாலும் அதில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்க வேண்டும். அப்படியான உணர்வு இல்லை என்றால் அந்த உறவில் இருந்து விலகிவிடுவதே நல்லது. 

2 /7

பேச வரும்போது அதனை புறக்கணிப்பது, அன்பு, கவலை என எந்தவொரு உணர்வையும் பகிர்ந்து கொள்ள வரும்போது புறக்கணிப்பது தொடர்ந்து நடத்தால் அந்த உறவு நீண்டகாலத்துக்கு சரியாக இருக்காது.

3 /7

எந்த வேலை செய்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பது, விமர்சிப்பதை மட்டுமே தொழிலாக வைத்துக் கொள்வதுபோல் நடந்து கொண்டால் அந்த உறவு யாராக இருந்தாலும் நீங்கள் விலகியிருங்கள். சிறிதளவேனும் பாராட்டும், அரவணைப்பும் இருப்பது அவசியம்.

4 /7

சுயமரியாதையை சீண்டும் வகையில் நடந்து கொள்வது, எப்போதும் மகிழ்ச்சியற்ற நிலைக்கு இட்டுச் செல்வது என இருந்தால் அந்த உறவு கசப்பான நினைவுகளையே சுமந்து கொண்டிருக்கும். அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிறந்ததாக இருக்காது.

5 /7

சிறிய விஷயங்களைக்கூட பாராட்டி அன்பு பரிமாறிக் கொள்வது என்பது காதல் மற்றும் நட்பில் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணாதிசயம். அப்படியான அணுகுமுறைகள் ஏதும் உங்கள் உறவில் இல்லையென்றால், அந்த உறவை மறுபரிசீலனை செய்யலாம். 

6 /7

நம்பிக்கைகளை சிதைக்கும் வகையில் நடந்து கொள்வது, பழி தீர்ப்பதுபோல் நடந்து கொள்வது, வஞ்சம் வைத்து செயல்படுவது போன்ற நிகழ்வுகளை எதிர்கொண்டால் கொஞ்சம்கூட யோசிக்காமல் நீங்கள் அந்த உறவில் இருந்து விலகிவிடுங்கள்.   

7 /7

எப்போதும் பழைய பிரச்சனைகள் கொண்டு வந்து சண்டை போட முயற்சிப்பது, தீர்க்கப்படாத சிக்கல்களை வைத்து காயப்படுத்த நினைப்பது ஆகியவை உறவில் இருந்தால் அந்த உறவும் உங்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நன்றாக இருக்காது.