குரு பெயர்ச்சி, எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

குரு பெயர்ச்சி 2022: ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 12ம் தேதி குரு பகவான் மீன ராசிக்குள் நுழைவார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2022, 12:36 PM IST
  • குரு பெயர்ச்சி 2022
  • குரு பகவானின் இந்த மாற்றம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன்
  • குரு அருளால் பணமும் அதிர்ஷ்டமும் மழை போல் பொழியும்
குரு பெயர்ச்சி, எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் title=

புராண நம்பிக்கைகளின்படி, வியாழன் கடவுள்களின் குரு அந்தஸ்தைப் பெற்றுள்ளது. குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே தனது ராசியை மாற்றுகிறார். அறிவு, குழந்தைகள், கல்வி, மதப்பணி, புனித ஸ்தலங்கள், செல்வம், தர்மம், அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு காரணமான கிரகம் வியாழன் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 13ஆம் தேதி வியாழன் ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் குரு தனது சொந்த ராசியான மீனத்தில் நுழைவார். இதன் காரணமாக அனைத்து ராசிக்காரர்களும் பாதிக்கப்படுவார்கள், ஆனால் சில ராசிக்கு சிறப்பு பலன் பெறலாம். அதனால் நாட்டிலும் மாநிலத்திலும் வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்த வியாழன் மாற்றம் வெவ்வேறு ராசிக்காரர்களை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பண ஆதாயம் இருக்கும், கௌரவம், பதவி உயர்வு இருக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

ரிஷபம்: பிள்ளைகள், நிதி சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்பு உண்டு.

மிதுனம்: தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும்.

கடகம்: உங்களுக்கு வியாழன் ராசி மாற்றம் கலவையாக இருக்கும்.

சிம்மம்: வியாபாரத்தில் முன்பை விட நிலைமைகள் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம், ஆனால் அதிகம் கவலைப்பட தேவையில்லை.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் தொழிலில் புதிய உயரங்களை அடைவார்கள்.

துலாம்: பணச் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

விருச்சிகம்: பணியிடத்தில் நீங்கள் செய்யும் பணி பாராட்டப்படும். புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

தனுசு: வேலை மற்றும் வியாபாரத்திற்கு சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

மகரம்: உங்களைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி உங்களை கடினமாக உழைக்க வைக்கும்.

கும்பம்: இந்த ராசிக்காரர்களுக்கு வியாழன் பண பலன்களைத் தருவார். பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நேரம் அற்புதமாக இருக்கும்.

மீனம்: இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் பாராட்டப்படுவார்கள், கௌரவமான பதவியைப் பெறுவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News