ஜிம்மிற்கு போகாமல் எடையை குறைப்பது இப்படி? ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யுங்கள் போதும்!

உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி? இங்கே பார்ப்போம். 

Written by - Yuvashree | Last Updated : Oct 15, 2023, 05:00 PM IST
  • ஜிம்மிற்கு போகாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?
  • வீட்டு உடற்பயிற்சிகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன.
  • என்னென்ன உடற்பயிற்சிகளை செய்யலாம்?
ஜிம்மிற்கு போகாமல் எடையை குறைப்பது இப்படி? ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யுங்கள் போதும்! title=

சமூகத்தில் பலர் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனை, உடல் பருமன். இதனால் அவதிப்படுவோர் பலரால் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருப்பர். அவர்களுக்கான பதிவு இது. 

உடற்பயிற்சியினால் ஏற்படும் பலன்கள்:

தற்போதையை பரபர நவீன வாழ்க்கையில் பலரால் உடற்பயிற்சிக்கென்று நேரம் ஒதுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. தினமும் உடற்பயிற்சி செய்வதால், கொழுப்பு கரைவதோடு தசைகளும் வலு பெறுகின்றன. உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கண்டிப்பாக, நாம் வீட்டிலோ அல்லது நமக்கு பிடித்த இடத்திலேயே கூட உடற்பயிற்சி செய்து கொள்ளலாம். அப்படி வீட்டில் செய்ய ஏதுவான சில ‘ஹோம் வர்க் அவுட்ஸ்’ லிஸ்டை இங்கே பார்க்கலாம். 

1.ஸ்குவாட்:

உடலில் உள்ள கொழுப்பை கரைத்து தசைகளை வலு பெற வைக்கும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, ஸ்குவாட். இதை நம்ம ஊரில் கொஞ்சம் மெருகேற்றி சிலர் தோப்புக்கரணமாக போடுவதுண்டு. கால் தசை மற்றும் க்ளூட் வலுவாக்க உதவும் உடற்பயிர்சி, ஸ்குவாட். எதையாவது எடுப்பதற்கு குணிந்து நிமிருவது, படியேறுவது போன்ற தினசரி நடவடிக்கைகள் கூட ஸ்குவாட் உடற்பயிற்சியாக கருதப்படுகிறது. உடலை ஆக்டிவாக வைத்திருக்க உதவும் உடற்பயிற்சி இது. 

மேலும் படிக்க | Weight Loss Tips: மூன்றே நாளில் 1 கிலோ எடை குறையணுமா... ‘இதை’ செய்யுங்க போதும்..!!

2.புஷ் அப்:

புஷ் அப் செய்வதால் கை, கால் முட்டி இடையே இருக்கும் தசை வலுபெறும். தோள்பட்டை, மார்பக பகுதி, க்ளூட், கல் போன்ற இடங்களில் உள்ள தேவையற்ற தசையை குறைக்க இந்த உடற்பயிற்சி உதவும். டோனிங் டோனிங் தசை எனக்கூறப்படும் வலுமிகுந்த தசையை வளர்த்துக்கொள்ளவும் புஷ் அப் உதவும். பழக்கம் இல்லாதவர்களுக்கு புஷ்-அப் உடற்பயிற்சி மிகவும் கடினமானதாக தோன்றும். அப்படி முதன் முதலில் புஷ் அப் செய்வோர் முட்டியை ஊன்றி, தரையில் கை வைத்து புஷ் அப் எடுக்கலாம். அப்படியில்லையென்றால் முதலில் சுவற்றில் கை வைத்து பழகிக்கொண்டு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தை குறைத்துகொண்டே புஷ் அப் எடுக்கலாம். புஷ் அப் எடுப்பது சிறந்த மூச்சுப்பயிற்சியாகவும் கருதப்படுகிறது. 

3.லஞ்சஸ்:

Lunges வகை பயிற்சி, முழு உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இந்த உடற்பயிற்சி, நம் வயிற்றுக்கு கீழுள்ள தேவையற்ற தசைகளை குறைக்க உதவும். இதை செய்ய முதலில் தரையி நேராக நின்று கொண்டு இடுப்பில் கைவைத்துக்கொள்ள வேண்டும். உங்களது கால் விரல்கள் நேராக இருக்க வேண்டும். முதலில் வலது கால் அல்லது இடது காலை முன் வைத்து முட்டியை மடக்க வேண்டும். அதன் பிறகு மறு காலிற்கு மாற்றி அதே போல செய்ய வேண்டும். இதை செய்யும் போது உங்களது மார்பக பகுதி நேராக நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும். இதனால் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த உடற்பயிற்சியை செய்யும் போது மெதுவாக செய்யவும். 

4.ப்ளாங்க்:

Plank வகை பயிற்சி நம் உடலில் உள்ள முக்கிய தசைகளை வலுப்படுத்த உதவும். இந்த பயிற்சி, கூன் விழுந்த முதுகினை சரி செய்ய உதவும். இடுப்பு மற்றும் இடுப்பு தசைகளை வலுப்படுத்த உதவும் பயிற்சி இது. இதை செய்வதால் முதுகு வலி நீங்கும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 30 நொடிகள் ப்ளாங்கினால், வயிற்றுத்தசையில் உள்ள கொழுப்பு குறையும். இந்த பயிற்சியை செய்ய முதலில் தரையில் உங்களது கை முட்டியை வைத்து பேலன்ஸ் செய்ய வேண்டும், பின்னர் உடலை ஒட்டு மொத்தமாக தரையில் இருந்து தூக்கி, கால் விரல்களால் பேலன்ஸ் செய்ய வேண்டும். இப்படி எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அதே நிலையில் இருக்கலாம். 

5.பர்பீஸ்:

இடுப்பிற்கு மேல் உள்ள தசைகளை குறைக்க உதவும் உடற்பயிற்சிகளுள் ஒன்று, Burpees. இதை முழு உடற்பயிற்சி என்று கூறுவர். உடலின் முக்கிய தசைகளை பாதுகாக்கவும் அவற்றை வலுவாக்கவும் உதவும் உடற்பயிற்சி இது. தொடையில் உள்ள தசைகளும் கொழுப்பும் இந்த உடற்பயிற்சியினால் கரையும். உடலின் ஆற்றலையும் வேகத்தையும் அதிகரிக்கும் சக்தி, இந்த உடற்பயிற்சிக்கு இருக்கிறது. 

மேலும் படிக்க | Weight Loss Tips: 10 நாட்களில் 5 கிலோ எடை குறைக்கலாம், இதை மட்டும் செஞ்சா போதும்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News