நீங்கள் உலகின் பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது விதவிதமான ஹோட்டல்களில் தங்கியிருக்கக் கூடும். பல கட்டிடங்களுக்கும் சென்றிருக்கக் கூடும். அதில் நீங்கள் பல முறை, ஹோட்டலில் எண் 13 அறையை அல்லது கட்டிடத்தில் 13 வது மாடியையும் இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கலாம். அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா... 13 என்ற எண்ணைப் பற்றி பல விஷயங்கள் பரவலாக கூறப்படுகின்றன. உலகில், அதிலும் பெரும்பாலும் மேலை நாடுகளில் 13 எண்ணை கேட்டாலே மக்கள் அலறுவதைக் காணலாம். அதிலும் 13ம் தேதி வெள்ளிக்கிழமை என்றால் வீட்டிலேயே முடங்கி விடும் பலரைக் காணலாம்.
ALSO READ | Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!
மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக எண் 13 என்பது மிகவும் அபசகுனமாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இயேசுவின் கடைசி விருந்து (Last Supper) சாப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை 13 என கூறப்படுகிறது. மேலும் ஏசு மரித்த ஆள் 13ம் தேதி வெள்ளிக்கிழமை என கூறப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 13 எண்ணை பார்த்தாலும், கேட்டாலும், மக்கள் அச்சத்தில் உறைந்து விடுகின்றனர்.
இது ஒரு வகையான ஃபோபியா என மருத்துவர்கள் கூறுகின்றனர். எண் 13 பற்றிய இந்த பயம் ட்ரிஸ்கைடேகாபோபியா என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான் உலகின் பல இடங்களில் குறிப்பாக மேலை நாடுகளில் அறை எண் 13 அல்லது 13 வது தளம் காணமுடியாது. 12 வது மாடிக்குப் பிறகு நேரடியாக 14 வது தளம் இருக்கும்.
ALSO READ |Tears: ‘கண்களில் ஏன் இந்த கண்ணீர்’: சுவாரஸ்ய தகவல்..!!
இந்தியாவிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்களில் 13ம் எண்ணை காண முடியாது. அதே போல்பல பெரிய ஹோட்டல்கள் அல்லது கட்டிடங்கள் சர்வதேச தரத்தின்படி கட்டப்பட்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல், 13வது மாடி, 13ம் எண் கொண்ட அறைகள் கட்டப்படுவதில்லை. இந்தியாவின் சண்டிகர் நகரத்தில் கூட, செக்டர்-13 உருவாக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் எண் 13 பற்றி பல வகையான மூடநம்பிக்கைகள் உள்ளன. அங்கு, கூட்டம் நடத்தும் போது கூட 13 நாற்காலிகள் இருப்பது கூட அசுபமாக கருதப்படுகிறது.
ALSO READ | தண்ணீரில் ஏன் எண்ணெய் மிதக்கிறது; இரண்டும் சேராததன் காரணம் என்ன...!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR