இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப் போகும் முக்கிய போட்டியாளர்

Bigg Boss 7 Tamil This Week Eviction: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்கிற தகவல் உறுதியாகி இருக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 30, 2023, 01:15 PM IST
  • இந்த வாரம் இரட்டை எலிமினேஷனைப் பற்றிய செய்திகள் உள்ளன.
  • இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார் ரவீனா.
  • ரவீனாவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப் போகும் முக்கிய போட்டியாளர் title=

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி: பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இந்த வார எவிக்ஷனில் யார் வெளியேறப்போகப் போகிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி:
ஆங்கிலம், இந்தி என பிற மொழிகளில் வெவ்வேறு பெயர்களுடன் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி, பிக்பாஸ் (Bigg Boss). தமிழில், 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் பெரிய அளவில் டி.ஆர்.பி இருக்கிறது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிதான் தற்போது தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சின்னத்திரை தொடர்களை விட, இந்த நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இந்த நாள் வரை சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. பெரிய திரை மற்றும் சின்னத்திரையில் தோன்றிய சில முகங்களும், சில டிஜிட்டல் முகங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களாக உள்ளனர்.

மேலும் படிக்க | விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்-செருப்பை தூக்கியடித்த மர்ம நபர்கள்?

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், இதற்கு முன்னர் இல்லாத புது ரூல்ஸ்களும், புதுப்புது டாஸ்குகளும் நிகழ்த்தப்பட்டன. முந்தைய சீசன்களில் ஒரே வீட்டில் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டார்-ஸ்மால் பாஸ் வீட்டார் என்று பிரிக்கப்பட்டனர். இதனாலேயே, போட்டி ஆரம்பித்த முதல் வாரம் பல பஞ்சாயத்துகள் எழுந்தன. இதையடுத்து, முதல் வாரமே ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். இதுதான் ட்விஸ்ட் என்று நினைத்தால், இதை விட பெரிய ட்விஸ்டாக வாரா வாரம் டபுள் எவிக்ஷனும் நடைப்பெற்றது. அந்த வகையில், கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு குறைவான மக்கள் வாக்குகளை பெற்று சரவண விக்ரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளாராம். 

இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் யார்?
கடந்த வாரம் சரவண விக்ரம் எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த போட்டியாளர்களில் அதிகம் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வரும் மாயா அல்லது நிக்சன் தான் குறைவான வாக்குகள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவீனா தான் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் மணி உடனேயே எப்போதும் இருக்கிறார் என வெளியில் இருந்து அவரது குடும்பத்தினரே வந்து திட்டிவிட்டு போன நிலையில் அடுத்த வாரமே அவர் எலிமினேட் ஆகி இருக்கிறார்.

ரவீனா சம்பளம் எவ்வளவு?
இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார் ரவீனா. 87 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்த ரவீனாவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரட்டை எலிமினேஷன்:
இதனிடையே இந்த வாரம் இரட்டை எலிமினேஷனைப் பற்றிய செய்திகள் உள்ளன. இந்த மாதம் நிகழ்ச்சி இரட்டை எலிமினேஷனை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, பிக் பாஸ் 7 ஆவது சீசனின் இரட்டை எலிமினேஷனின் போது அனன்யா மற்றும் கூல் சுரேஷ் ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர். புத்தாண்டு 2024 கொண்டாட்டங்களுக்கு முன்னதாக இந்த வாரம் பிக் பாஸ் தமிழ் 7 இல் இருந்து யார் வெளியேறுவார்கள் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் படிக்க | விஜயகாந்த் கடைசியாக நடித்த படம்..பேசிய டைலாக்..வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News