இந்த ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற சிறந்த தமிழ் படங்கள்!

Best Tamil Movies: பல தமிழ் படங்கள் இந்த ஆண்டு வெளியாகி வெற்றியை பெற்றுள்ளது.  பலரும் எதிர்பார்க்காத சில படங்கள் 100 கோடி வசூலையும் பெற்றது.  

Written by - RK Spark | Last Updated : Nov 26, 2023, 06:53 AM IST
  • பல ஜானர்களில் படங்கள் வெளியாகி உள்ளது.
  • டாப் ஹீரோ படங்கள் பல வெற்றி பெற்றுள்ளன.
  • சின்ன பட்ஜெட் படங்கள் அதிக லாபம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற சிறந்த தமிழ் படங்கள்! title=

IMDb Best Tamil Movies: இந்த 2023ம் ஆண்டில் பல புதுமுக இயக்குனர்கள் சாதித்து உள்ளனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சில படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளது.  வரலாற்று திரைப்படங்கள், கமெர்சியல் படங்கள், பரபரப்பான திரைக்கதைகள், குடும்ப பாசம், நட்பு என பல ஜானர்களில் இந்த ஆண்டு பல படங்கள் வெளியாகி உள்ளது.  இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கூட சொல்லலாம்.  2023ம் ஆண்டு வெளியாகி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த டாப் 8 IMDb ரேட்டிங் பெற்ற படங்கள் பற்றி பார்ப்போம். 

மேலும் படிக்க | லியோ to சித்தா-2023 டாப் ஹிட் படங்களை ‘இந்த’ ஓடிடி தளங்களில் பார்க்கலாம்!

நல்ல ரேட்டிங்கை பெற்ற சிறந்த படங்கள்

மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் மாவீரன். வித்தியாசமான திரைக்கதை கொண்ட இப்படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  சாந்தி டாக்கீஸ் தயாரித்த இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ரசிகர்களுக்கு பல சுவாரஸ்யத்தை கொடுத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.  

ஜெயிலர்: ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படம் பரபரப்பாக பேசப்பட்டது.  ரஜினி நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் சரியாக ஓடாததால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது.  

சித்தா: எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில் வெளியான படம் சித்தா. இப்படம், ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.  இந்த படத்தில் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மலையாள நடிகை நிமிஷா நடித்திருந்தார். பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாகவும், சித்தப்பா - மகள் இடையே இருக்கும் பாசத்தை பிரதிபலிக்கும் படமாகவும் இந்த படம் இருந்தது. 

மார்க் ஆண்டனி: யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மார்க் ஆண்டனி. மினி சுடுடியோஸ் வினோத் குமார் தயாரித்துள்ள இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் விஷால், ரிது வர்மா, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் நடித்து இருந்தனர்.

லியோ: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்த ஆண்டு வெளியான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று லியோ.  இந்த படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை படைத்துள்ளது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சாதனைகளை படைத்துள்ளது.  நெட்பிளிக்ஸ் தளத்தில் தற்போது ஒளிபரப்பாகிறது. 

பொன்னியின் செல்வன் 2: கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று புனைகதை தான் 'பொன்னியின் செல்வன்'. இந்த நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக எடுத்து இருந்தார்.  இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

வாரிசு: தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான படம் வாரிசு. குடும்ப பின்னணி கொண்ட இந்த படம் விஜய்யின் கரியரில் முக்கிய படமாக அமைந்தது.  பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது.  

குட் நைட்: நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மோகன், குறட்டையால் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கிறார். இது அவரது திருமண வாழ்வில் என்ன என்ன பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதே கதை.  இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கிய இந்த படத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் என பலர் நடித்து இருந்தனர்.  சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  நகைச்சுவை நிறைந்த ஒரு எதார்த்தமான படமாக குட் நைட் இருந்தது.

மேலும் படிக்க | விஜய் மகன் இயக்கும் படத்தில் ஹீரோ யார் தெரியுமா? ‘இந்த’ 4 பேரில் ஒருவர்தான்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News