அழகு!! சும்மா சூப்பரா எண்ட்ரி கொடுத்த மணமகள்: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Bride Entry Viral Video: மணமகளின் இப்படி ஒரு எண்ட்ரியை நீங்கள் பார்த்திருக்க முடியாது. தன் திருமணத்துக்கு அசத்தலாய் வரும் மணப்பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 11, 2023, 01:00 PM IST
  • இந்திய திருமணங்கள் மேள தாளங்களும், நாதஸ்வர இசையும் இல்லாமல் முழுமையடையாது.
  • பல திருமண வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படுகின்றன.
  • திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
அழகு!! சும்மா சூப்பரா எண்ட்ரி கொடுத்த மணமகள்: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இந்திய திருமணங்கள் மேள தாளங்களும், நாதஸ்வர இசையும் இல்லாமல் முழுமையடையாது. பல திருமண வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படுகின்றன. வழக்கமாக, மணமகன் திருமண நாளில் காரில் அமர்ந்தோ அல்லது குதிரை மீது அமர்ந்தோ, மேளதாளத்துடன் திருமண மண்டபத்துக்கு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஊர்வலமாக வருவார். ஆனால், இந்த வழக்கமான போக்கை மாற்றி ஒரு மணமகள் குதிரை மீது அமர்ந்து தனது திருமணத்துக்கு வந்துள்ளார். இந்த தனித்துவமான சடங்கின் வீடியோ இணையத்தில் நேர்மறையான கமெண்டுகளையும் வரவேற்பையும் பெற்று வருகின்றது. 

மணமகள் இளஞ்சிவப்பு நிற லெஹெங்காவில் அழகாக உடையணிந்து, குதிரையில் ஏற முயல்வதை வீடியோவின் தொடக்கத்தில் காண முடிகின்றது. அடுத்த பிரேமில், மணமகள் குதிரையின் மீது வசதியாக அமர்ந்து நடனமாடுவதைக் காண்கிறோம். பின்னர், மணப்பெண் குதிரையை ஓட்டிக்கொண்டு ஊர்வலத்தில் நடனமாடியபடி தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மண்டபத்தை நோக்கி செல்கிறார். 

மேலும் படிக்க | Monkey vs Leopard: சினிமாவை மிஞ்சும் ‘சேஸ்’ காட்சிகள், காட்டில் நடக்கும் களேபரத்தின் வைரல் வீடியோ

அசத்தலான மணமகளின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by subh vivah (@shubhavivahh)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ‘shubhavivahh’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 128K வியூஸ்களும் 3000 -க்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

ஒரே மாதிரியான போக்கை உடைத்து நேர்மறையான அதிர்வுகளை பரப்பியதற்காக நெட்டிசன்கள் மணமகளை பாராட்டியுள்ளனர். மணமகளின் கியூட்டான பாணியையும் துணிச்சலையும் அனைவரும் ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்கள். 

மேலும் படிக்க | நாய் குட்டிக்கு அடித்த ’அதிர்ஷ்டம்’ தண்டவாளத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிசயம்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News