நாய் குட்டிக்கு அடித்த ’அதிர்ஷ்டம்’ தண்டவாளத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிசயம்: வைரல் வீடியோ

நாய்க்குட்டி ஒன்று தண்டவாளத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த வீடியோ இப்போது வைரலாகியிருக்கிறது. எத்தகைய சூழலிலும் பொறுமையாக இருந்தால் வழி பிறக்கும் என்பதற்கு உதாரணமாக இந்த வீடியோ அமைந்திருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 10, 2023, 10:14 PM IST
நாய் குட்டிக்கு அடித்த ’அதிர்ஷ்டம்’ தண்டவாளத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிசயம்: வைரல் வீடியோ title=

வாழ்க்கையில் எத்தகைய கடினமான சூழலிலும் பொறுமையும் நிதானமும் இருந்தால் நிச்சயம் ஒரு வழி பிறக்கும். அப்போது எந்த கடினமான இடத்தில் இருந்தாலும் எளிமையாக மீண்டு விடலாம் என்பதற்கு இப்போது டிவிட்டரில் வைராலகியிருக்கும் இந்த வீடியோவே சாட்சி. கடினமான காலங்களில் நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தால் உயிர் பிழைத்துவிடலாம். அதற்கு உதாரணம் இப்போது இணையத்தில் வைரலாகியிருக்கும் இந்த நாயின் வீடியோவை எடுத்துக் காட்டாக கூறலாம். அந்த வீடியோவில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த நாய்க்கு ரயில் வருவது தெரியவில்லை. 

மேலும் படிக்க | ராட்சத பாம்பை கொன்று பதம் பார்த்த பறவை; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ

திடீரென பார்க்கும்போது ரயில் செல்ல தொடங்கியிருந்தது. அப்போது நாய் ரயில் தண்டவாளங்களுக்கு இடையிலேயே படுத்திருக்கிறது. பயமும், பீதியும் கலந்துவாறு என்ன செய்வதென்றே தெரியாமல் நாய் இருந்தது. ஆனால், அந்த நாய் நம்பிக்கை ஒன்றை மட்டும் இழக்கவில்லை. அமைதியாக ரயில் செல்லும் வரை காத்திருந்தது. ரயில் செல்கிறதே என அஞ்சியவாறு தப்பிக்க முயற்சி செய்திருந்தால், நிச்சயம் அந்த நாய் உயிரோடு இருக்க வாய்ப்புகள் துளியும் இல்லை. 

என்ன நடக்கும் என்பதை பொறுமையாக பார்க்கலாம் என கடைசி வரை இருந்த நாய்க்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்த பரிசு தான் உயிர். ரயில் சென்றதும் அவ்வளவு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ரயில் தண்டவாளத்தில் இருந்து வெளியே ஓடி வருகிறது அந்த நாய். பார்க்கும் அனைவருக்கும் பூரிப்பை ஏற்படுத்தும் இந்த வீடியோவை ஸ்டாலின் ஐபிஎஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும், "பொறுமையாகவும், நம்பிக்கையுடனும்  இருந்தால் எப்படிப்பட்ட துன்பத்தையும், நமக்கு வரும் ஆபத்தையும் கடந்து மீண்டு வரலாம்.." என்ற நம்பிக்கை வரிகளையும் கேப்சனாக பதிவிட்டுள்ளார். அவரின் இந்த டிவிட்டர் பதிவை பலரும் லைக் செய்திருக்கின்றனர். நம்பிக்கை மற்றும் பொறுமைக்கு உதாரணமாக இந்த வீடியோ இருப்பதாகவும் கூறியுள்ளனர்.  

மேலும் படிக்க | கலி காலம்னு சும்மாவா சொன்னாங்க.. ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்ணும் குரங்கு - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News