கலி காலம்னு சும்மாவா சொன்னாங்க.. ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்ணும் குரங்கு - வைரல் வீடியோ

குரங்கு ஒன்று பெட் மீது அமர்ந்து கொண்டு ஜாலியாக மொபைலில் ஸ்ரால் செய்யும் வீடியோ இப்போது வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 10, 2023, 08:31 PM IST
கலி காலம்னு சும்மாவா சொன்னாங்க.. ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்ணும் குரங்கு - வைரல் வீடியோ title=

டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செம ஆக்டிவாக இருப்பவர் ஆனந்த் மஹிந்திரா. அவர் இப்போது ஒரு வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் குரங்கு ஒன்று ஸ்மார்ட்டாக வீடியோ பார்ப்பது அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. பார்ப்பதற்கு காமெடியாக இருக்கும் அந்த வீடியோவில் குரங்கு மொபைலை ஸ்கிரால் செய்து அடுத்தடுத்த வீடியோவை பார்ப்பது தான் இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் பெட் மீது படுத்திருக்கிறார். அவருக்கு அருகில் குரங்கு ஒன்று டிரெண்டிங் உடை அணிந்து கொண்டு அமர்ந்திருக்கிறது.

மேலும், கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அந்த குரங்கு அதில் வீடியோவை பார்க்கிறது. தனக்கு வீடியோ பிடிக்கவில்லை என்றால் அடுத்தடுத்த வீடியோக்களை தள்ளிவிட்டு வேறு வீடியோக்களை பார்க்கிறது. நெட்டிசன்களும் குரங்கின் இந்த வீடியோவை பார்த்து வியந்துள்ளனர். குரங்கு ஸ்மார்ட்போன் அசால்டாக யூஸ் செய்கிறது என வேடிக்கையாக தெரிவித்திருக்கும் நெட்டிசன்கள், இது உண்மையிலேயே வியப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். குரங்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்த வீடியோவை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் வீடியோ பிடித்திருபதாகவும், விரும்பும் வகையில் இருப்பதாகவும் லைக் கொடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | முதலில் பெண்.. இப்போது ஆண்..ஓடும் ரயிலில் செய்ய வேண்டிய செயலா: வீடியோ வைரல்

வீடியோவை பார்த்து வியந்த நெட்டிசன் ஒருவர், இப்போது மொபைல் போன் ஸ்கிரால் செய்வதற்கு கூட மக்களால் முடியவில்லை. அதற்காக ஒருவரை பணியமர்த்தும் நிலைக்கு இந்த டெக் உலகில் மக்கள் தயாராக இருக்கிறார்கள். மனிதர்களை பணியமர்த்தினால் காசு கொடுக்க வேண்டும் என்பதற்காக விலங்குகளை வேலைக்கு அமர்த்திவிட்டார்கள் போலும். குரங்கு வீடியோவை ஸ்கிரால் செய்வதை பார்க்கும்போது செம டிரெயினிங் கொடுத்துவிட்டார்கள் என்பது தெரிகிறது. அந்த குரங்கு தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்கிறது. சரியான ஊதியமும், புரோமோஷனும் கொடுத்துவிட மறக்காதீங்க என கிண்டலாக எழுதியுள்ளார். 

டிஜிட்டல் உலகத்துக்கு மனிதர்கள் தான் பலியாகிவிட்டார்கள், விலங்குகளையாவது இந்த போதையில் இருந்து விலக்கி வைத்துவிடுங்களேன் என வேண்டுகோள் ஒருவர் விடுத்துள்ளார். மற்றொருவர் இன்னும் சில காலங்களில் விலங்குகள் மனிதர்கள் வேலையை செய்ய தொடங்கிவிடும் என்பதையும் நம்புங்கள். இந்த உலகில் எதுவுமே சாத்தியமில்லாமல் இல்லை. காலம் அதனை உறுதி செய்யும் என கூறியிருக்கிறார் மற்றொரு நெட்டிசன்.

மேலும் படிக்க | ராட்சத பாம்பை கொன்று பதம் பார்த்த பறவை; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News