முதலில் பெண்.. இப்போது ஆண்..ஓடும் ரயிலில் செய்ய வேண்டிய செயலா: வீடியோ வைரல்

Viral Video: தற்போது வைரலாகும் வீடியோவில், மெட்ரோ ரயிலில் ஒருவர் குளிப்பதைக் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 10, 2023, 12:49 PM IST
  • மெட்ரோவில் அரைநிர்வாணமாக வலம் வந்த ஆண்.
  • ஓடும் ரயிலில் குளிக்கும் நபர்.
  • இந்த சம்பவம் நியூயார்க் மெட்ரோவில் நடந்ததாக தெரிகிறது.
முதலில் பெண்.. இப்போது ஆண்..ஓடும் ரயிலில் செய்ய வேண்டிய செயலா: வீடியோ வைரல் title=

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித புகைப்படங்களை நாம் தினமும் காண்கிறோம். சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்களு படங்களும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலமாக மெட்ரோ ரயிலில் அத்துமீறி நடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயிலில் மிக பிகினி அணிந்த ஒரு பெண் பயணம் செய்த வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலானது.

ரிதம் சன்னா என்ற பெயர் கொண்ட 19 வயது பெண்ணான இவர் டெல்லியின் பொதுஇடங்களில் அரைநிர்வாண ஆடைகளுடன் வலம் வருகிறார். மேலும் இவரது பலசேரு வீடியோக்களை நாம் சமீப காலமாக கண்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது மற்றொரு மோதிரோ வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த வீடியோ இந்தியாவில் இருந்து அல்ல. இந்த வீடியோ நியூயார்க் நகர மெட்ரோ ரயிலில் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தவளையை சின்னாபின்னமாக பதம் பார்த்த விஷப் பாம்பு; பதற வைக்கும் வைரல் வீடியோ

ஓடும் ரயிலில் குளிக்கும் நபர்
இந்தநிலையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், நியூயார்க் நகர மெட்ரோவில் ஒருவர் குளிப்பதை நாம் காணலாம். இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் @princezee என்பவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவுக்கு தற்போது வரை 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 

வீடியோவை இங்கே காணுங்கள்: 

வீடியோவில், பயணிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது இளைஞர் ஒருவர் மெட்ரோ ரயிலுக்குள் குளிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. முதலில் அந்த நபர் எல்லோரையும் போல அமர்ந்திருக்கிறார். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து எழுந்து உடனடியாக தனது ஆடைகளை அகற்றி, தன்னிடம் இருந்த சூட்கேசை திறந்து அதற்குள் நின்று குளித்தார். பிறகு ஒரு துணியை எடுத்து துடைத்துக் கொள்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | இது ஓவரா இல்ல? மணமகளையே கீழே தள்ளிவிட்டு இப்படி ஒரு விளையாட்டா? வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News