‘சும்மா இருக்க மாட்ட?’: கடுப்பாகி கிளாஸ் எடுத்த கிங் கோப்ராவின் வைரல் வீடியோ

King Cobra Viral Video: பாம்பை கையில் கொண்டு விளையாடலாமா? அப்படி விளையாடிய ஒரு நபருக்கு நேர்ந்த அதிர்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களின் வைரல் ஆகி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 19, 2022, 01:22 PM IST
  • பாம்பை சீண்டிப் பார்த்து சீன் போட்ட நபர்.
  • சும்மா இருக்குமா பாம்பு.
  • கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ.
‘சும்மா இருக்க மாட்ட?’: கடுப்பாகி கிளாஸ் எடுத்த கிங் கோப்ராவின் வைரல் வீடியோ title=

இணையவாசிகளின் ஏகோபித்த பொழுதுபோக்கிடமாக இருக்கும் சமூக ஊடகங்களில் பல வித வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றிலிருந்து நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்வதோடு, இவை நமது சோர்ந்த மனநிலையை மாற்றி புத்துணச்சியும் அளிக்கின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றன. இதில் பாம்புகளின் சில வினோத செயல்களையும், சில நபர்கள் பாம்புகளுடன் அச்சமில்லாமல் பழகும் நிழக்வுகளையும் காண முடிகின்றது. பலர் பாம்புகளை கண்டு அஞ்சினாலும், சிலர் அவற்றுடன் எந்த வித சலனமும் அச்சமும் இல்லாமல் நண்பர்களை போல பழகுகிறார்கள். நண்பர்களுடன் விளையாடுவதை போல அவற்றுடன் விளையாடுகிறார்கள். 

எனினும், சில சமயங்களில் இந்த உயிரினங்களுடன் விளையாடுவது ஆபத்தையும் இழுத்து விடுகிறது. இதை எடுத்துக்காட்டும் ஒரு பாம்பின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் ஒரு நபர் தனது கைகளில் நீண்ட ராஜ நாகத்தை தூக்குவதை காண முடிகின்றது. ஆனால் சிறிது நேரத்தில் பாம்பு அவரைத் தாக்குகிறது. பீதியடைந்த நபர் எப்படியோ தன்னை பாம்பிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறார். ஆனால், இந்த காட்சி காண்பதற்கு மிகவும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: சுவர்களுக்கு இடையில் சிக்கிய கருநாகம்; வீட்டை இடித்து மீட்ட வனத்துறை 

பாம்புடன் விளையாடி பல்பு வாங்கிய நபர்

இந்த வீடியோவில் ஒருவர் திறந்த வெளியில் நிற்பதைக் காண முடிகிறது. அவர் தனது கைகளில் ஒரு நீண்ட மற்றும் ஆபத்தான ராஜ நாகத்தை பிடித்துள்ளார். முதலில் பாம்பு மிகவும் அமைதியாக இருக்கிறது, ஆனால் சிறிது நேரம் கழித்து அது, அந்த நபர் எதிர்பார்க்காத நேரத்தில் அவரை தாக்குகிறது. பாம்பிலிருந்து தப்பிக்க, நபர் நொடிப்பொழுதில் தன் தலையை அகற்றிக்கொள்கிறார். ஒரு சில கணங்கள் தாமதத்திருந்தாலும், பாம்பு நிச்சயமாக அந்த நபரை காயப்படுத்தி இருக்கும். 

திக் திக் வீடியோவை இங்கே காணலாம்: 

கதிகலங்க வைக்கும் காட்சி

இந்த காணொளியில் காணப்படும் காட்சி மிகவும் ஆபத்தானதாகவும், காண்பவர்களை பீதியடையச் செய்யும் வகையிலும் உள்ளது. இதைப் பார்த்து சமூக வலைதளவாசிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். வனவிலங்குகள் தொடர்பான இந்த வீடியோ animals_powers என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களும் ஆயிரக்கணக்கான லைக்குகளும் கிடைத்துள்ளன. வன விலங்குகளுடன் பாதுகாப்பின்றி விளையாடுவது மிக ஆபத்தானது என பல இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | ஸ்விக்கி-சோமாட்டோ ஊழியர்கள் செய்த வேலை: பாராட்டித்தள்ளும் இணையவாசிகள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News