கார் மீது கார் ஓட்டிய ஓட்டுநர் - வைரல் வீடியோ

கார் மீது கார் ஓட்டிய ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 16, 2022, 09:32 PM IST
  • கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து
  • கார் மீது ஏறிச் சென்ற மற்றொரு கார்
  • இணையத்தில் வைரலான வீடியோ
கார் மீது கார் ஓட்டிய ஓட்டுநர் - வைரல் வீடியோ  title=

சாலைகளில் நடக்கும் விபத்துகள் பலவிதம். கோர விபத்துகள் ஒருபுறம் இருக்க, விபத்துகளில் சில அதிர்ஷ்டமும் நிகழும். கோர விபத்தாக வேண்டியது நல்ல வாய்ப்பாக அதிர்ஷ்டத்தின் துணையோடு அனைவரும் பத்திரமாக இருப்பார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் இருக்கின்றன. உயிர் போகும் சூழல் வந்தும், நல்வாய்ப்பாக பிழைத்தவர்கள் ஏராளம். சாலை விபத்து முதல் மின்சார பாய்ச்சல் வரை என பல உதாரணங்கள் இருக்கின்றன.

மேலும் படிக்க | Viral Video: நீர்யானையிடம் அகப்பட்ட சிங்கம்; ஆற்றில் நடக்கும் போராட்டம்

ஆனால், இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ இன்னொரு ரகம். பார்த்தாலே தெரிகிறது கிண்டலும் கேலியும் நிரம்ப அந்த ஓட்டுநர் வாகனத்தை ஓட்டியிருக்கிறார் என்று. ஒரு சாலையில் மெதுவாக எதிரெதிரே வரும் இரண்டு கார்களும், கவனிக்காமல் செல்கின்றன. ஒரு கட்டத்தில் ஒரு கார் ஓட்டுநர் கார் வருவதை அறிந்து தன்னுடைய காரை நிறுத்தி விடுகிறார். ஆனால் இன்னொரு கார் ஓட்டுநர் காரை பார்த்தும் பார்க்காததுபோல் தன்னுடைய வாகனத்தை அப்படியே இயக்கிவிடுகிறார். இதனால் எதிர்புறத்தில் இருக்கும் கார் மீது வேகமாக மோதியதுடன், அந்த கார் மீதே ஒன்சைடாக ஏறி பின்புறத்தில் வந்து நிற்கிறது.

அந்த கார் ஓட்டுநர் நினைத்திருந்தால் காரை நிறுத்தியிருந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. இந்த வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. பலர், அந்த கார் ஓட்டுநரை வசைமாரி பொழிந்து வருகின்றனர். பொறுப்பற்றத் தனமாக கார் ஓட்டுவதாக திட்டித் தீர்த்துள்ளனர். சாலைகளில் செல்லும்போது கவனமாகவும், விழுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதை இந்த வீடியோவை பார்த்தாவது பலரும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், நம்மால் யார் என்ற அடையாளமே தெரியாத ஒருவர் பாதிக்கபட வேண்டியிருக்கும். 

மேலும் படிக்க | ஒட்டகச்சிவிங்கிகளின் வேற லெவல் சண்டை: வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News