அவசரமாக ஜெர்மனி செல்லும் கே.எல்.ராகுல்

காயத்தால் தென்னாப்பிரிக்கா தொடரில் இருந்து விலகிய கே.எல்.ராகுல், புத்துணர்ச்சிக்காக ஜெர்மனி செல்ல இருக்கிறாராம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 16, 2022, 05:01 PM IST
  • ஜெர்மனி செல்லும் கே.எல்.ராகுல்
  • காயம் காரணமாக சிகிச்சைக்கு செல்கிறார்
  • இங்கிலாந்து தொடரில் இருந்து விலகல்
அவசரமாக ஜெர்மனி செல்லும் கே.எல்.ராகுல் title=

இந்திய அணி இப்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 3வது போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த தொடருக்கு கே.எல்.ராகுல் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு திடீரனெ காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | வாழ்த்து செய்தியால் வந்த வினை - நெட்டிசனிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட கங்குலி

ராகுலின் காயத்தின் தன்மையை பரிசோதித்த மருத்துவர்கள் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனால், பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்ல இருப்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, கே.எல்.ராகுல் மேல் சிகிச்சைக்காக இம்மாத இறுதி அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் ஜெர்மனி செல்கிறார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.

ராகுலின் பிட்னஸில் பிசிசிஐ கவனம் செலுத்தி வருவதாகவும் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். இதனால், இங்கிலாந்து டூரில் கே.எல்.ராகுல் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்ததும் இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. அங்கு கடந்த ஆண்டு பாதியில் கைவிடப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டி உள்ளிட்ட 7 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் கே.எல். ராகுல் பங்கேற்க மாட்டார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் காயமடைந்திருப்பதால், ஒரு சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது. இதனால், இந்திய அணியின் கேப்டனாக யாரை பிசிசிஐ நியமிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் விலகல்? மீண்டும் விராட் கேப்டன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News