தற்கொலையா நரபலியா?... கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் திடுக் திருப்பங்கள்

கள்ளக்குறிச்சியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாமென்று மாணவியின் தாய் கூறியுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 16, 2022, 06:46 PM IST
  • கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மரணம்
  • மாணவிக்கு 16 வயதுதான் ஆகிறது
  • மாணவி நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என தாய் சந்தேகம்
 தற்கொலையா நரபலியா?... கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் திடுக் திருப்பங்கள் title=

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். 

நேற்று முன்தினம் அதிகாலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் உடல்  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு நடைபெற்றது. 

மேலும் படிக்க | ரத்தத்தின் ரத்தங்கள் ரத்தம் சொட்ட சொட்ட சம்பவம் செய்தார்கள் - அதிமுகவை வெளுத்து வாங்கும் டி.ஆர். பாலு

உடற்கூராய்வு நடந்ததில், மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்றும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி மாணவியின் இதயம் உள்ளிட்ட 5 உறுப்புகள், தடயவியல் துறை ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று மாணவியின் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க | நலம் பெறுங்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளரே - முதலமைச்சரின் ட்விஸ்ட் ட்வீட்

இந்தச் சூழலில், தனியார் பள்ளி மாணவி மர்மமான உயிரிழப்புக்கு நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரை நேரில் சந்தித்து மனு அளித்தார். 

முன்னதாக மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேரணியாக செல்ல முயன்ற அவர்களை காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

மேலும் படிக்க | கும்பகோணம் தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினம் - 94 குழந்தைகளுக்கு அஞ்சலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News