கும்பகோணம் பள்ளித் தீ விபத்தின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சம்பவம் நடைபெற்ற பள்ளி முன்பு தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் புகைப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இந்த நாளில் 94 குழந்தைகளுக்கும் அஞ்சலி செலுத்தும்போது, ஒட்டுமொத்த மக்களும் குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து...
இந்த கோரத் தீ விபத்து, கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. மனதை உலுக்கும் இந்த கோர விபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டது. தமிழகத்தையே மறக்க முடியாத சோகத்தில் ஆழ்த்திய இந்த கோர சம்பவம் நடந்து இன்றோடு 18 ஆண்டு ஆகிறது. தொண்டையில் சிக்கிய முள் போல, இப்போதும் அந்த வலி மட்டும் போகவேயில்லை பலருக்கு.
இச்சம்பவத்தின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் புகைப்படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டன. அதன் முன்பு குழந்தைகள் பிரியமாக சாப்பிடக்கூடிய திண்பண்டங்களை வைத்து உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
காலை 10 மணி அளவில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நினைவை போற்றும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் அங்கிருந்து ஊர்வலமாக சென்று அருகில் உள்ள குழந்தைகள் நினைவுகத்தில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் படிக்க | சிலிண்டரை திறந்துவிட்டு ஊரையே அலறவிட்ட பெண்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ