6th Pay Commission: 6வது ஊதியக் குழுவின் கீழ் பழைய ஊதிய விகிதத்தின்படி இன்னும் ஊதியம் பெற்று வரும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance), அடிப்படை ஊதியத்தில் 239% -இலிருந்து 246% ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் ஜூலை 1, 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையால் வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணை (OM) தெரிவிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி ஒழுங்குமுறை தொடர்பான முந்தைய அலுவலக குறிப்பேடுகளின் விதிகள் இந்த புதிய புதுப்பிப்பின் கீழ் தொடர்ந்து பொருந்தும் என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.


Central Government: மத்திய அரசின் ஊதிய விகிதங்கள்


மத்திய அரசின் ஊதிய விகிதங்களைப் பின்பற்றும் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்கள் இந்தத் தகவல் சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. 


"இந்த அலுவலக குறிப்பாணையின் உள்ளடக்கங்கள், மத்திய அரசின் ஊதிய விகிதங்களை ஏற்றுக்கொண்ட அமைச்சகங்கள் / துறைகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட வேண்டும்" என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Central Government Employees: எந்தெந்த மத்திய அரசு ஊழியர்கள் 6வது ஊதியக் குழுவின் கீழ் உள்ளனர்?


- மத்திய தன்னாட்சி அமைப்புகள் (Central Autonomous Bodies)
- PSU எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் (Public Sector Undertakings) பணியாளர்கள் 
- மற்றும் சில மத்திய அரசு சிவில் ஊழியர்கள் (Central Government Civilian Employees) 


ஆகியோர் இன்னும் 6வது ஊதியக் குழு விதிகளின் கீழ் உள்ளனர்.


மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி


DA Hike Under 7th Pay Commission: 7வது ஊதியக்குழுவின் கீழ் அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு கடந்த மாதம் 1 கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படியை 3% உயர்த்தியது. இதையடுத்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவை 53% ஆக அதிகரித்துள்ளன. ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில், ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது.


தொழிலாளர் அம்மைச்சகம் வழங்கும் அகவிலைப்படி உயர்வு விதிகள் அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில், அதாவது ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ (DA) தீர்மானிக்கப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களும் தீர்மானிக்கப்படுகின்றன.  அடுத்த டிஏ உயர்வு (DA Hike) ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வரும். வழக்கமாக, ஜனவரி மாத அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் மாதமும், ஜூலை மாத அகவிலைப்படி அதிகரிப்பு செப்டம்பர்-அக்டோபர் மாதத்திலும் அறிவிக்கப்படும்.


மேலும் படிக்க | EPF ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரி முதல் CPPS புதிய ஓய்வூதிய முறை மூலம் பெரிய நிவாரணம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ