ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி

Central Government Pensioners Pension Hike: மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 80 வயதை எட்டிய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 12, 2024, 03:56 PM IST
  • 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
  • ஓய்வூதிய அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
  • மத்திய அரசு 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தின் பலனை வழங்கும்.
ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி

Central Government Pensioners Pension Hike: சூப்பர் சீனியர் சிட்டிசன்கள், அதாவது, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. இனி மத்திய அரசு 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியத்தின் பலனை வழங்கும். பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் இது குறித்து சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதில், மத்திய அரசு, இந்த ஓய்வூதியதாரர்களுக்கு கருணை உதவித்தொகை என்ற பெயரில் கூடுதல் ஓய்வூதியம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source

Pension For Super Senior Citizens: ஓய்வூதிய அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது

மத்திய அரசு சிவில் சர்வீசஸ்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 80 வயதை எட்டிய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை ஓய்வூதிய அமைச்சகம் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், கூடுதல் கொடுப்பனவுகளை விநியோகிக்கும் செயல்முறையை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளன. CCS (ஓய்வூதியம்) விதிகள் 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் விதிகளின்படி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை நிறைவுசெய்த பிறகு, விதிகளின் கீழ் ஓய்வூதியம் (Pension) மற்றும் கருணைக் கொடுப்பனவு வழங்கப்படும்.

Compassionate Allowance: வயது வாரியாக சூப்பர் சீனியர் சிடிசன்களுக்கு கிடைக்கும் கூடுதல் நன்மைகள்

- 80 முதல் 85 வயது வரை உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 20% உயர்வு கிடைக்கும். 
- 85 முதல் 90 வயது வரையிலான ஓய்வூதியதாரர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 30% உயர்வு இருக்கும்.
- 90 முதல் 95 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் அடிப்படை ஓய்வூதியத்தில் 40% உயர்வு கிடைக்கும்.
- 95 முதல் 100 வயதுடையவர்கள் 50% அதிகரிப்பை பெற தகுதியுடையவர்கள். 
- 100 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அடிப்படை ஓய்வூதியத்தில் 100 சதவீதம் பெற தகுதியுடையவர்கள். 

மேலும் படிக்க | EPF ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஜனவரி முதல் CPPS புதிய ஓய்வூதிய முறை மூலம் பெரிய நிவாரணம்

ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்:

- ஆகஸ்ட் 20, 1942 இல் பிறந்த ஓய்வூதியதாரர்கள், 1 ஆகஸ்ட் 2022 முதல் அடிப்படை ஓய்வூதியத்தின் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள். 
- ஆகஸ்ட் 1, 1942 இல் பிறந்த ஓய்வூதியம் பெறுபவர்களும் ஆகஸ்ட் 1, 2022 முதல் அடிப்படை ஓய்வூதியத்தின் 20 சதவீத கூடுதல் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்.

Compassionate Allowance: ஓய்வூதியதாரர்களுக்கு இது எப்போது கிடைக்கும்?

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத் துறையின் அறிவிப்பில், ஓய்வூதியம் பெறுவோர் நிர்ணயிக்கப்பட்ட வயதை எட்டிய முதல் நாள் முதல் கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணை உதவித்தொகை அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் ஓய்வூதிய கொடுப்பனவுகள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வயது அதிகரிக்கும் போது அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளை நிர்வகிக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஈடுபட்டுள்ள அனைத்து துறைகள் மற்றும் வங்கிகள் புதிய ஓய்வூதிய வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியுள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களும் தாமதமின்றி சரியான பலன்களைப் பெறுவது உறுதி செய்யப்படும்.

மேலும் படிக்க | டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறையலாம்... ஆனால்... SBI கூறும் முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News