7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: இந்திய ரிசர்வ் வங்கி ஒருபுறம், ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், வீட்டுக் கடன்கள் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்குப் பிறகு, வங்கிகள் முதல் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் வரை வீட்டுக் கடன்களின் விகிதங்களை உயர்த்தக்கூடும். இதன் காரணமாக கடன்களின் இஎம்ஐ அதிகமாகும். எனினும், மத்திய அரசு ஊழியர்கள் அதிகரிக்கும் கடன் விகிதங்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வீட்டுக் கடன்களை அரசாங்கம் வழங்கி வருகிறது. இதன் மூலம் குறைந்த விலையில் கடன் பெற்று தங்களுடைய சொந்த வீட்டுக் கனவை அவர்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிசர்வ் வங்கி கடன்களின் வட்டி விகிதங்களை உயர்த்தினாலும், மத்திய அரசு 2022-23 நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீடு கட்டும் / வாங்கும் அட்வான்ஸுக்கான (ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸ்) வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், நடப்பு நிதியாண்டிற்கான ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸ் (HBA) வட்டி விகிதத்தை 7.1 சதவீதமாகக் குறைத்துள்ளது. அதேசமயம், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்திய பிறகு, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் 8.50-லிருந்து 9 சதவீதமாக அதிகரிக்க உள்ளன. இந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம் மிகக்குறைவானதாக கருதப்படுகின்றது.


மேலும் படிக்க | 8th Pay Commission: சம்பளம், அலோவன்ஸ் மற்றும் பென்ஷன் பற்றிய புதிய அறிவிப்பு! 


7.1%-ல் கிடைக்கும் ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸ்


10 ஆண்டு கால அரசுப் பத்திரங்களின் வருவாயின் அடிப்படையில் ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸூக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்கிறது. 2021-22 ஆம் ஆண்டில் மத்திய ஊழியர்களுக்கு, ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸுக்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக இருந்தது. தற்போது அது 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர்கள் ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு தங்கள் சொந்த வீட்டை கட்டிக்கொள்ளலாம் அல்லது கட்டிய பிளாட்டுகளையும் வாங்கலாம். 


25 லட்சம் வரை கடன் பெறலாம்


7வது ஊதியக் குழு பரிந்துரைகள் மற்றும் ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸ் 2017-ன் விதிகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் 34 மாதங்கள் அடிப்படைச் சம்பளத்திற்கு நிகரான அல்லது அதிகபட்சமாக ரூ.25 லட்சம் ரூபாயை வீடு கட்ட அல்லது வாங்க முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம். ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸ் எளிய வட்டி விகிதத்தில் கிடைக்கும். 


ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸ் விதிகளின்படி, கடனின் அசலை முதல் 15 ஆண்டுகளில் 180 இஎம்ஐகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். பிறகு கடனுக்கான வட்டியை ஐந்து ஆண்டுகளில் 60 இஎம்ஐகளில் செலுத்த வேண்டும். வீடு வாங்க அல்லது கட்ட வங்கிக்ளிலிருந்து பெறப்பட்ட கடனை திருப்பி செலுத்தவும் ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸை பெறலாம். 


மேலும் படிக்க | 7th Pay Commission: சம்பள உயர்வு, பதவி உயர்வு விதிகளில் வருகிறது புதிய மாற்றம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ