மத்திய அரசு ஊழியர்கள், 2022-ம் ஆண்டுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படியைப் பெறுவதற்கு நீண்ட காலமாக ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக ஜூலை மாத அமர்வில் இந்த டிஏ உயர்வு கிடைக்கும், இந்த டிஏ உயர்வின் மூலம் பிஎஃப், பணிக்கொடைத் தொகை, டிராவல் அலோவன்ஸ், ஹெச்ஆர்ஏ அலோவன்ஸ் போன்றவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் 34 இல் இருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்படலாம் என்று சில செய்திகள் கூறுகிறது, அதேசமயம் ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் குறைந்தபட்சம் 4 சதவிகிதம் உயர்த்தப்படலாம் என்று ஏஐசிபி இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது. அரசாங்கம் எப்போது டிஏ உயர்வு மற்றும் 18 மாத நிலுவை ஊதியம் தொடர்பான செய்தியை வெளியிடும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | ITR Filing AY22-23: காலக்கெடு நீட்டிக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் இதோ
மே மாதத்திற்கான சமீபத்திய அகில இந்திய CPI-IW தரவுகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு நல்ல செய்தியை வழங்கப்போவதாக கூறப்படுகிறது. சில தகவல்களின்படி டிஏ அளவை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும் மற்ற 4 அலோவன்ஸ்களும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது, டிஏ உயர்வுடன் இந்த அலோவன்ஸ்களும் சேர்த்து உயர்த்தப்பட்டால் அது அரசு ஊழியர்களுக்கு சந்தேகமின்றி எண்ணிலடங்கா மகிழ்ச்சியை அளிக்கும். மேலும் டிஏ உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர வருங்கால வைப்பு நிதியும் (பிஎஃப்) உயர்த்தப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய காரணியாக ஏஐசிபி இன்டெக்ஸ் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் மே மாதத்திற்கான டிஏ அதிகரிப்பதற்கான நிகழ்தகவை சுட்டிக்காட்டுகிறது. தொடர்ந்து ஊடகங்களில் டிஏ உயர்வு, 18 மாத நிலுவை தொகை குறித்து செய்திகள் வெளியாகி ஊழியர்களின் ஆவலை அதிகப்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்து அரசாங்கம் எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | EPFO Latest Update: விரைவில் நல்ல செய்தி, கணக்கில் வரும் பம்பர் தொகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ