மத்திய அரசு ஊழியர்களுக்கான எல்டிசி வசதி: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மோடி அமைச்சரவை 4 சதவீதம் உயர்த்தியது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு மற்றொரு பரிசு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் டிஏ-வை 34-ல் இருந்து 38 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. தற்போது மத்திய அரசு ஊழியர்களையும் அவர்களது குடும்பங்களையும் மகிழ்விக்கும் மற்றொரு செய்தி வந்துள்ளது.  அரசின் புதிய முடிவின் கீழ், ஜம்மு-காஷ்மீர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லடாக் மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்குச் செல்ல, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு விடுப்பு பயணச் சலுகை (LTC) வசதியை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நாள் வரை பலன் கிடைக்கும்


அரசாங்கத்தின் புதிய முடிவிற்குப் பிறகு, தகுதியான அனைத்து மத்திய ஊழியர்களும் 25 செப்டம்பர் 2024 வரை இந்த வசதியைப் பெற முடியும். பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், விடுப்பு பயணச் சலுகை (எல்டிசி) திட்டம் 26 செப்டம்பர் 2022 இல் இருந்து 25 செப்டம்பர் 2024 வரை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வசதியின் கீழ், மத்திய அரசின் தகுதியான ஊழியர்கள் எல்டிசியில் பயணம் செய்யும் போது ஊதியத்துடன் கூடிய விடுப்பு மற்றும் பயண டிக்கெட்டுகளுக்கான தொகையையும் பெறுகின்றனர்.


மேலும் படிக்க | அகவிலைப்படி உயர்வுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டுமா? எவ்வாறு கணக்கிடப்படுகிறது? 


விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது


தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு, லடாக் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய பகுதிகளுக்கு செல்ல எல்டிசி வசதியைப் பெறலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, விமானப் பயணத்திற்கு தகுதியில்லாத அரசு ஊழியர்களும் இந்த மாநிலங்களுக்கு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு மற்றும் காஷ்மீர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு அவர்களின் தலைமையகத்தில் இருந்து எந்த ஒரு விமானம் முலமாகவும், நேரடியாக எகானமி வகுப்பில் அவர்கள் பயணம் செய்யலாம்.


அதே நேரத்தில், எல்டிசியை தவறாகப் பயன்படுத்தினால், அது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், ஊழியர் விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிலும், மத்திய அரசு, ஊழியர்களுக்கு கிடைக்கும் இந்த வசதியின் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 7TH PC: இந்த மாநிலத்தில் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38% ஆக உயர்ந்தது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ