7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: ஜூலை முதல் அமலுக்கு வரவுள்ள அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்புக்காக 65 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இதன் அறிவிப்பு நவராத்திரி பண்டியை ஒட்டி வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 28ஆம் தேதி அன்று அரசு 4 சதவீத உயர்வு பற்றி அறிவிக்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால் டிஏ உயர்வு அறிவிப்புக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவின் படி பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச சேவை நிபந்தனைகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குறைந்தபட்ச சேவை விதிகளை மாற்ற முடிவு


செப்டம்பர் 20 ஆம் தேதி பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில், பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச சேவை விதிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படும். பதவி உயர்வுக்குத் தேவையான மாற்றங்களில் பொருத்தமான திருத்தங்கள் செய்யப்பட்டு ஆட்சேர்ப்பு விதிகள்/சேவை விதிகளில் இணைக்கப்படலாம் என்று DoPT மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எத்தனை வருடங்கள் உழைத்தால் இனி பதவி உயர்வு கிடைக்கும்?


இதற்காக, அனைத்து அமைச்சகங்களும் / துறைகளும் உரிய நடைமுறையைப் பின்பற்றி ஆட்சேர்ப்பு விதிகளில் தேவையான மாற்றங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. திருத்தப்பட்ட விதிகளின்படி, லெவல் 1 மற்றும் லெவல் 2க்கு மூன்று ஆண்டுகள் பணிபுரிவது அவசியம். லெவல் 6 முதல் லெவல் 11 வரை 12 ஆண்டுகளுக்கான சேவை அவசியம். இருப்பினும், லெவல் 7 மற்றும் லெவல் 8- க்கு, இரண்டு வருட சேவை மட்டுமே தேவைப்படும். மாற்றத்திற்குப் பிறகு புதிய சேவை


விதிமுறைகள் பற்றிய தகவலை இங்கே காணலாம்:



மேலும் படிக்க | 7PC HIKE: மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரியில் நல்ல செய்தி கிடைக்கும் 


ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மார்ச் 2022 இல் அதிகரிக்கப்பட்டது. அப்போது அரசாங்கம் அகவிலைப்படியை 3 சதவிகிதம் அதிகரித்ததால், மொத்த அகவிலைப்படி 31 சதவிகிதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்ந்தது. அப்போது அரசு ஊழியர்களுக்கு மூன்று மாத நிலுவைத் தொகை வழங்கப்பட்டது. 


ஜூலை மாதம் முதல் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது. இம்முறை 4 சதவிகித உயர்வு இருக்கு என எதிர்பார்க்கப்படுகின்றது. செப்டம்பர் 28-ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: தீபாவளிக்கு முன் ஊழியர்களுக்கு கிடைக்கும் 3 பெரிய பரிசுகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ