8th Pay Commission: அடுத்த ஊதியக்கமிஷன் வருமா, வராதா? முக்கிய அப்டேட் இதோ
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் மனதில் பல வித கேள்விகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 8 ஆவது ஊதியக்குழு ஆகும்.
8வது ஊதியக்குழு சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களின் மனதில் பல வித கேள்விகள் உள்ளன. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று 8 ஆவது ஊதியக்குழு ஆகும். தற்போதைக்கு அடுத்த ஊதியக் குழுவை அமைக்கும் எண்ணம் இல்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது பரிசீலிக்கப்படுவதில்லை. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தற்போது தொழிலாளர் சங்கம் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளது. எட்டாவது ஊதியக் குழு அமைக்கப்படுமா இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்பது சங்கத்தின் கருத்தாக உள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 முதல் அமலில் உள்ளன. அதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 18,000 மற்றும் அதிகபட்சம் ரூ 56,900 ஆக உள்ளது.
8வது ஊதியக்குழு மற்றும் பழைய ஓய்வூதிய கோரிக்கை
8வது ஊதியக் குழு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவை திரும்பக் கொண்டுவரப்படாவிட்டால், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம் என அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனம் AIDEF தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில ஊழியர்கள் கூட்டாக கலந்து கொள்ளக்கூடும். சமீபத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 8வது ஊதியக் குழுவை அமைக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை என்று கூறினார்.
நிதியமைச்சக இணை அமைச்சரின் அறிக்கை இதுதான்
இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியிடம், ‘8வது ஊதியக் குழுவை அமைப்பது குறித்து அரசு பரிசீலனை செய்கிறதா இல்லையா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 8வது ஊதியக்குழு தொடர்பாக இதுவரை எந்த திட்டமும் அரசுக்கு இல்லை என்றார். ‘ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2014ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இது 2016 இல் செயல்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்களுக்கு, 10 ஆண்டுகள் வரை காத்திருக்காமல் சம்பள மேட்ரிக்ஸ் மதிப்பாய்வு செய்யப்படக்கூடும்’ என்று அவர் தெரிவித்தார்.
அகவிலைப்படியின் பங்கு என்ன?
ஜெசிஎம்- இன் தேசிய கவுன்சிலின் கூற்றுப்படி, சம்பள கமிஷனின் பரிந்துரைகளின்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள திருத்தம் நடைபெறுகிறது. அகவிலைப்படிக்கும் (டிஏ) இதில் பங்கு உண்டு. டிஏ 50 சதவீதத்தை தாண்டும்போது, அது ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும்.
இருப்பினும், இது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி மட்டுமே நடக்கிறது. இது பல சலுகைகளையும் சேர்க்கிறது. ஜேசிஎம் செயலாளர் (பணியாளர்கள் தரப்பு) சிவ கோபால் மிஸ்ராவின் கருத்துப்படி, அரசாங்கம் அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகளை செலுத்த வேண்டும். இருப்பினும், 8வது ஊதியக்குழு அமைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. இதில் இருந்து அரசு பின்வாங்கினால் அல்லது புதிய விதிமுறைகளை கடைபிடித்தால் மத்திய, மாநில ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
2024 வரை காத்திருக்க வேண்டும்
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஜெசிஎம் கவுன்சில் நிலை-2 மற்றும் பாரதிய மஸ்தூர் சங்கம் ஆகியவை மத்திய அரசு 8வது ஊதியக் குழுவை சரியான நேரத்தில் அமைக்கும் என்று நம்புகின்றன. பரிந்துரைகளுக்கு இன்னும் நேரம் உள்ளது. அதேபோல, 2026 வரை அமல்படுத்த கால அவகாசம் உள்ளது. அதற்கு முன் 2024 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். அதுதான் சரியான நேரமாக இருக்கும், அப்போது அரசின் நோக்கம் என்ன என்பது தெளிவாகும். அப்போதுதான் சங்கமும் கோரிக்கையை எழுப்பும்.
அகவிலைப்படி / அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கும்
48 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 63 லட்சம் ஓய்வூதியதாரர்களும் தங்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளதால் நிம்மதி அடைந்துள்ளனர். ஜூலை 2022க்கான அகவிலைப்படியில் 4 சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்பது சமீபத்தில் ஏஐசிபிஐ- இன் தரவுகளிலிருந்து தெளிவாகியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என தெரிகிறது. தற்போது மத்திய ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் கீழ் 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கொடுப்பனவை நான்கு சதவீதம் அதிகரித்த பிறகு, டிஏ விகிதம் 38 சதவீதத்தை எட்டும்.
மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி சூத்திரத்தில் மாற்றம், விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ