7th Pay Commission: அகவிலைப்படி சூத்திரத்தில் மாற்றம், விவரம் இதோ

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) கணக்கீட்டின் சூத்திரத்தை அரசாங்கம் மாற்றியுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அடிப்படை ஆண்டைத் (பேஸ் இயர்) திருத்தியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 11, 2022, 04:23 PM IST
  • அகவிலைப்படி (டிஏ) கணக்கீட்டின் சூத்திரத்தில் மாற்றம்.
  • தொழிலாளர் அமைச்சகம் அகவிலைப்படிக்கான அடிப்படை ஆண்டை மாற்றியுள்ளது.
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO), தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, ஊதிய விகிதக் குறியீட்டின் அடிப்படை ஆண்டு 1963-65 இலிருந்து 2016-க்கு மாற்றப்பட்டுள்ளது.
7th Pay Commission: அகவிலைப்படி சூத்திரத்தில் மாற்றம், விவரம் இதோ title=

7வது ஊதியக்குழு சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) கணக்கீட்டின் சூத்திரத்தை அரசாங்கம் மாற்றியுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அடிப்படை ஆண்டைத் (பேஸ் இயர்) திருத்தியுள்ளது. பணவீக்கத் தரவைக் கருத்தில் கொண்டு அரசு அவ்வப்போது அடிப்படை ஆண்டைத் திருத்துகிறது.அடிப்படை ஆண்டில் ஏற்படும் மாற்றம் ஊழியர்களின் ஊதிய முறையில் பிரதிபலிக்கும்.

தொழிலாளர் அமைச்சகம் அகவிலைப்படிக்கான (டிஏ கணக்கீடு) அடிப்படை ஆண்டை மாற்றியுள்ளது. ஊதிய விகிதக் குறியீட்டின் புதிய தொடர் (WRI-Wage Rate Index) வெளியிடப்பட்டுள்ளது. 2016=100 பேஸ் இயர் WRI இன் புதிய தொடர், 1963-65 பேஸ் இயருக்கான பழைய தொடரை மாற்றும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO), தேசிய புள்ளியியல் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, ஊதிய விகிதக் குறியீட்டின் அடிப்படை ஆண்டு 1963-65 இலிருந்து 2016-க்கு மாற்றப்பட்டுள்ளது. இது நோக்கத்தை விரிவுபடுத்தவும் குறியீட்டை அதிக திறன் கொண்டதாக்கவும் உதவுகிறது. 

மேலும் படிக்க | 8th pay commission: புதிய ஓய்வூதியக்குழு அமைக்கப்படுமா? மத்திய அரசு விளக்கம்! 

7th Pay Commission

7வது ஊதியக் குழுவின் தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் பெருக்குவதன் மூலம் அகவிலைப்படியின் அளவு கணக்கிடப்படுகிறது.

உதாரணத்திற்கு, அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து, உங்கள் அடிப்படை ஊதியம் ரூ. 56,900 என்றால், டிஏ (56,900 x12)/100.  அகவிலைப்படியின் சதவீதம் = கடந்த 12 மாதங்களில் CPI இன் சராசரி - 115.76. இப்போது வரும் தொகை 115.76 ஆல் வகுக்கப்படும். வரும் மதிப்பெண் 100 ஆல் பெருக்கப்படும்.

அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு

ஜூலை 2022-க்கான அகவிலைப்படியில் 4 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு இனி 38 சதவீதம் டிஏ கிடைக்கும்.

அகவிலைப்படி (டிஏ) என்றால் என்ன?

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு உதவியாக அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அகவிலைப்படி முதன்முதலில் இந்தியாவில் 1972 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு, மத்திய அரசு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை வழங்கத் தொடங்கியது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு, முழு கணக்கீடு இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News