மத்திய அரசு அதன் ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் 8வது ஊதியக்குழுவை விரைவில் அறிவிக்கும் என தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெள்ளியாகிக்கொண்டே இருக்கிறது.  இந்த 8வது ஊதியக்குழுவின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், அலோவன்ஸ் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றியமைக்கப்பட போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், 7வது ஊதியக்குழுவின் கீழ், சம்பளம், அலவன்ஸ் போன்றவற்றை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் 8வது ஊதியக்குழு அறிவிக்கப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து  மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், 8வது ஊதியக் குழு எதிர்பார்த்தது போல் இருக்காது என்றும், இதன் மூலம் சம்பளத்தில் மாற்றம் போன்ற எந்த முன்மொழிவும் பரிசீலனையில் இல்லை.  ஆனால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம்,  அலோவன்ஸ் மற்றும் ஓய்வூதியத்தை திருத்த 8வது மத்திய ஊதியக் குழுவை (சிபிசி) அமைக்க வேண்டாம் என்று அரசு பரிசீலித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | 7th Pay Commission: சம்பள உயர்வு, பதவி உயர்வு விதிகளில் வருகிறது புதிய மாற்றம்!


மேலும் அவர் கூறுகையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம், அலோவன்ஸ் மற்றும் ஓய்வூதியங்களை மறுபரிசீலனை செய்ய மற்றொரு ஊதியக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறினார்.  இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, நிலுவைத்தொகை மற்றும் சம்பள உயர்வு போன்றவை எதிர்பார்க்கப்படுகிறது.



மேலும் படிக்க | EPFO உறுப்பினர்கள் எச்சரிக்கை! PF தொடர்பான இந்த வேலையை விரைவில் செய்யுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ