அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டறிவது எப்படி: இன்றைய காலகட்டத்தில், ஆதார் அட்டை வைத்திருப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதை புதுப்பித்து வைத்திருப்பதும் மிக அவசியமாகும். உங்கள் ஆதார் அட்டையின் அனைத்து விவரங்களும் புதுப்பிக்கப்படாவிட்டால், நீங்கள் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்றைய டிஜிட்டல் இந்தியாவில், உங்கள் ஆதார் தொடர்பான பெரும்பாலான வேலைகள் ஆன்லைனில் செய்யப்படுகின்றன. இருப்பினும், ஆதார் தொடர்பான சில பணிகளை ஆன்லைனில் முடிக்க முடியாது என்பதால், நீங்கள் ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதவிர, இணையதளம் குறித்து அதிகம் அறியாதவர்கள், ஆதார் அட்டை தொடர்பான பணிகளுக்காக, ஆதார் மையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் பல நேரங்களில் மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டுபிடிப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் எந்தப் பிரச்சனையையும் சந்திக்காமல் இருக்க என்ன செய்யலாம்? இது குறித்த முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம். 


அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டறிய 3 வழிகள் உள்ளன


ஆதார் அட்டை தொடர்பான முக்கியமான வேலைகளை நீங்கள் செய்ய வேண்டியிருந்து, உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், உங்கள் பிரச்சனைக்கு எளிதாக தீர்வு கிடைக்கும். அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டறிவதற்கான எளிதான வழியை இங்கே தெரிந்துகொள்ளலாம். ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in இல் அருகிலுள்ள ஆதார் மையத்தை எளிதாகக் காணலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். UIDAI போர்ட்டலில் அருகிலுள்ள மையத்தைக் கண்டறிய, மூன்று வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன - மாநிலம், பின் கோட் மற்றும் தேடல் பெட்டி (சர்ச் பாக்ஸ்).


மேலும் படிக்க | வாட்ஸ் அப் மூலம் ஆதார், பான் மற்றும் முக்கிய ஆவணங்களை டவுன்லோடு செய்வது எப்படி? 


பின் கோட் மூலம் அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதான வழியாகும்.


அருகிலுள்ள ஆதார் மையத்தை மாநில வாரியாகக் கண்டறிய, உங்கள் மாநிலத்துடன் மாவட்டம், கிராமம், நகரம் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். தேடல் பெட்டியின் மூலம் ஆதார் மையத்தைக் கண்டறிய, உங்கள் பகுதியின் பெயர், நகரத்தின் பெயர், மாவட்டத்தின் பெயர் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். பின் கோட் மூலம் அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டறிய, உங்களுக்கு பின் கோட் மட்டுமே தேவை. அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டறிய இந்த விருப்பம் மிகவும் சக்தி வாய்ந்தது. பின் கோட் மூலம் அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டறிய எளிதான வழியைத் தெரிந்து கொள்வோம்.


வீட்டின் அருகில் ஆதார் மையம் எங்கே உள்ளது என்பதை இந்த வழியில் தெரிந்து கொள்ளலாம்


- பின் லோட் மூலம் அருகிலுள்ள ஆதார் மையத்தைக் கண்டறிய, முதலில் uidai.gov.in என்ற ஆதார் அட்டையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.


- திரையில் தோன்றும் Get Aadhaar என்ற பிரிவில், Locate an Enrolment Center (பதிவு மையத்தைக் கண்டறிதல்) என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.


- Locate an Enrolment Center என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் திறக்கும். அங்கு மாநிலம், அஞ்சல் (PIN) குறியீடு மற்றும் தேடல் பெட்டி விருப்பம் ஆகிய மூன்று விருப்பங்களைக் காண்பீர்கள். இங்கே நீங்கள் பின் (PIN) கோட்-ஐ கிளிக் செய்ய வேண்டும்.


- அஞ்சல் (பின்) கோடை (Postal (Pin) Code) கிளிக் செய்த பிறகு, உங்கள் திரையில் புதிய பக்கம் திறக்கும். உங்கள் பகுதியின் 6 இலக்க பின் கோடை உள்ளிட்டு கீழே வந்து கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும்.


- இதற்குப் பிறகு, Locate a Centre (மையத்தைக் கண்டறி) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். Locate a Centre என்பதைக் கிளிக் செய்தவுடன், உங்களுக்கு அருகிலுள்ள அனைத்து ஆதார் மையங்களின் முழுமையான பட்டியல் உங்கள் திரையில் தோன்றும். இந்த பட்டியலில், ஆதார் மையங்களின் முழு முகவரி எழுதப்பட்டிருக்கும். 


ஆதார் அட்டை இன்றைய காலத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆவணமாக மாறியுள்ளது. உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால், உங்களுடைய பல முக்கியமான பணிகள் முழுமையடையாமல் போகலாம். ஆதார் அட்டை இல்லாமல் எந்த அரசாங்கத் திட்டத்தையும் பயன்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | EPFO சூப்பர் செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கப்படலாம், விவரம் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ