ஆதாரை ஆன்லைனில் டவுன்லோடு செய்திருக்கிறீர்களா? எச்சரிக்கை

அனைத்து வகையான செயல்முறைக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால், வங்கிகளில் கணக்கு தொடங்க நாம் கண்டிப்பாக ஆதார் அட்டை விவரங்களை வழங்க வேண்டும்.   

Written by - RK Spark | Last Updated : Oct 2, 2022, 12:46 PM IST
  • ஆதார் கார்டு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
  • இந்த ஆவணத்தை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியமாகும்.
  • சில மோசடி கும்பல் ஆதார் விவரங்களை திருடக்கூடும் என்கிற ஆபத்தும் உள்ளது.
ஆதாரை ஆன்லைனில் டவுன்லோடு செய்திருக்கிறீர்களா? எச்சரிக்கை title=

இந்திய குடிமகன்களுக்கு முன்னர் வாக்காளர் அடையாள அட்டை எவ்வளவு முக்கியமானதாக இருந்ததோ அதுபோல தற்போது ஆதார் அட்டை மிக முக்கியமான மற்றும் அவசியமான ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.  இதில் நமது சுயவிவரம், முகம்,கண் ரேகை, கைரேகை உட்பட பல முக்கியமான தகவல்களும் இடம்பெற்றுள்ளது, அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆவணத்தை நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியமாகும்.  அதுமட்டுமல்லாது இப்பொழுது வங்கி கணக்கு தொடங்க வேண்டுமென்றாலும், கல்வி சம்மந்தமான சேர்க்கைக்கும், அரசு மூலம் திட்டங்கள் பெறவும் என அனைத்து விதமான வேலைகளுக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது.  எதற்கெடுத்தாலும் ஆதார் அட்டை கொடுக்க வேண்டும் என்கிற நடைமுறை வந்துவிட்டதால், சில சமயம், சில மோசடி கும்பல் நமது ஆதார் அட்டை விவரங்களை திருடக்கூடும் என்கிற ஆபத்தும் இதில் உள்ளது.

மேலும் படிக்க | இந்த வங்கிகளில் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!

இதுகுறித்து யுஐடிஏஐ சமீபத்திய ட்வீட்டில் குறிப்பிடுகையில், இ-ஆதாரைப் டவுன்லோடு செய்ய இன்டர்நெட் கஃபேக்கள், கியோஸ்க்கள் அல்லது இதுபோன்ற பிற பொது தளங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களுக்கு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.  ஆதார் அட்டையை ஏதேனும் இடத்தில் நீங்கள் டவுன்லோடு செய்யும்பட்சத்தில் அதுகுறித்த விவரங்களை நீக்கிவிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.  அனைத்து வகையான செயல்முறைக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால், வங்கிகளில் கணக்கு தொடங்க நாம் கண்டிப்பாக ஆதார் அட்டை விவரங்களை வழங்க வேண்டும்.  அப்படி நாம் வழங்கும் ஆதார் அட்டை விவரங்களை வைத்து நமது வங்கி கணக்கை மோசடிக்காரர்கள் ஹேக் செய்துவிடுவார்களோ என்று அச்சம் அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளது.

மக்களின் இந்த அச்சத்தை தெளிவுபடுத்தும் வகையில் யுஐடிஏஐ அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது.  அந்த ட்வீட்டில், ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியாது என்று கூறப்பட்டுள்ளது.  ஆதார் எண்ணை நீங்கள் வெளியிட விரும்பவில்லை என்றால், விஐடி அல்லது மாஸ்க்ட் ஆதாரைப் பயன்படுத்தி கொள்ளலாம், இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.  இந்த மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரில், உங்கள் ஆதார் எண்ணின் 12 இலக்க எண் முதல் 8 இலக்கங்கள் வரை மறைக்கப்பட்டு கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே தெரியும்.

மேலும் படிக்க | EPFO E Nomination செய்யவில்லை என்றால் உங்களுக்குதான் நஷ்டம்: செயல்முறை இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News