ஆதார் கார்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

மக்களுக்கு ஆதார் குறித்த சந்தேகம் ஏதுவுமிருந்தால் help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று யூஐடிஏஐ தெரிவித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 27, 2022, 11:12 AM IST
  • ஆதார் குறித்த அச்சமும், தவறான கருத்துக்களும் இருந்து வருகிறது.
  • ஆதார் அட்டையை கவனமுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
  • எம்-ஆதார் செயலியில் கடந்த ஆறு மாதங்களாக உள்ள ஆதார் அங்கீகார ஹிஸ்டரியை பார்க்கலாம்.
ஆதார் கார்டில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா?  title=

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அடையாள சரிபார்ப்புக்கு நம்பகமான ஒரு முக்கியமான ஆவணமாக செயல்படுவது ஆதார் அடையாள அட்டை.  இந்தியாவில் உள்ள தனிநபர்கள், வங்கி சேவைகள், தொலைத்தொடர்பு சேவைகள் போன்ற எந்தவொரு அரசாங்க சேவைகளுக்கும் ஆதார் தான் முக்கியமான கருவியாக பயன்படுத்தப்படுகிறது.  இந்திய குடிமகன்கள் அனைவரிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஆவணங்களுள் ஒன்றாக ஆதார் அட்டை மாறிவிட்டது.  அனைத்து சேவைகளுடனும் ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறைகளை நடைபெற்று வருகிறது.  அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டையை பயன்படுத்துவதால் மக்களுக்கு இதுகுறித்த சில அச்சமும், தவறான கருத்துக்களும் இருந்து வருகிறது.  

மேலும் படிக்க | உங்கள் செல்ல மகளுக்கான சிறப்பான எதிர்காலம்; முழு விவரம் இதோ

இந்நிலையில் யூஐடிஏஐ ஆதார் அட்டையை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும், எதற்கெல்லாம் பயன்படுத்தக்கூடாது என்றும் சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளது.  ஆதார் அட்டை என்பது உங்களது டிஜிட்டல் அடையாளமாகும், அதனால் உங்கள் அடையாளத்தை நிரூபிக்க ஏதேனும் அவசியமிருப்பின் அப்போது மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும்.  உங்கள் மொபைல் எண், வங்கி கணக்கு எண் அல்லது பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, யுஏஎன், ரேஷன் கார்டு போன்ற வேறு எந்த முக்கியமான அடையாள ஆவணத்தையும் பகிரும் போது எப்படி கவனமுடன் பகிர்ந்து கொள்வீர்களோ அதேயளவு கவனமுடன் ஆதார் அட்டையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  உங்கள் அனுமதி பெற்றால் மட்டும் தான் மற்ற நிறுவனங்கள் உங்களது ஆதார் விவரங்களை பெறமுடியும், அதுவும் அவர்கள் எந்த நோக்கத்திற்காக உங்களது ஆதார் விவரங்களை பெறுகிறார்கள் என்பதை கேட்டறிந்த பின்னரே நீங்கள் ஆதாரை கொடுக்க வேண்டும்.

உங்கள் ஆதார் அடையாளத்தை கொடுக்க நீங்கள் விரும்பாத பட்சத்தில் விஐடி செய்யப்பட்ட ஆதாரை வழங்கலாம். யூஐடிஏஐ இணையதளம் அல்லது எம்-ஆதார் செயலியில் கடந்த ஆறு மாதங்களாக உள்ள ஆதார் அங்கீகார ஹிஸ்டரியை பார்க்கலாம்.  மின்னஞ்சலுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் உங்கள் ஆதார் எண் அங்கீகரிக்கப்படும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு செய்திகள் வரும்.  அதுபோல மொபைல் எண்ணுடனும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம், யூஐடிஏஐ ஆதார் லாக்கிங் மற்றும் பயோமெட்ரிக் லாக்கிங் வசதிகளை வழங்குகிறது.  உங்களுக்கு ஆதார் குறித்த சந்தேகம் ஏதுவுமிருந்தால் help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.  உங்கள் ஆதார் லெட்டர் /பிவிசி கார்டு அல்லது அதன் நகலை எதையும் கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்.  சமூக ஊடகங்களில் ஆதார் விவரங்களை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆதார் ஓடிபியை அங்கீகரிக்கப்படாத எந்த நிறுவனத்திற்கும் தெரிவிக்காமல் இருப்பதோடு, எம்-ஆதாரை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் யூஐடிஏஐ தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | ஊழியர்களுக்கான கிராஜுவிட்டி விதியில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News