சென்னை: கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் ஊரடங்கு தொடர்கிறது. பல்வேறு தொழில்களும் முடங்கிக் கிடந்தாலும், ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மட்டும் தொடர்ந்து இயங்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் உள்ள முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி ஆலைகளில் பணிபுரிபவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்கள் மிகவும் கடினமான நேரம். ‘இந்தியாவின் டெட்ராய்ட்’ (‘Detroit of India’) என்று அழைக்கப்படும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில், பல வாகன உற்பத்தி தொழிற்சாலைகளும், அதனுடன் தொடர்புடைய தொழில் வளாகங்களும் இருக்கின்றன. 


ஃபோர்டு, ஹூண்டாய், ரெனால்ட்-நிசான் போன்ற முக்கிய சர்வதேச நிறுவனங்கள் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடிய்தால், உற்பத்தி கணிசமாக குறைந்தது.


Also Read | TN Lockdown: தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு, நாளை அறிவிப்பு வெளியீடு


கடந்த ஆண்டு நாட்டில் கோவிட் -19 பரவியபோது (2020), மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியது. அதன்பிறகு, ஆட்டோமொபைல் தொழில்கள் பல மாதங்கள் தொடர்ந்து முடங்கின. தடைகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட போது, அவை மீண்டும் பணிகளை தொடங்கின. 


கோவிட் இரண்டாவது அலையில், தமிழக அரசின் உத்தரவின்படி, ஆட்டோமொபைல் தொழில்கள் தொடர்ச்சியான செயல்முறைத் தொழில்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, தொடர்ந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டன.


அதாவது கோவிட் தொற்று உச்சத்தில் இருந்த சமயத்திலும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் (Automobile industries) தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டன. முக்கிய வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் ஆலைகளை சில நாட்களுக்கு மூடிவிட்டனர், ஆனால் மீண்டும் உற்பத்தியை மீண்டும் தொடங்கினர், ஆனால் உற்பத்தி கணிசமாக குறைந்துவிட்டது.


Also Read | தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்வுகள் வருமா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை


தொற்றுநோய்களுக்கு மத்தியில் வேலை செய்வதன் சிரமங்களையும் பல்வேறு வாகன உற்பத்தியாளர்களின் பணியாளர் சங்க பிரதிநிதிகள் கோடிட்டுக் காட்டினர்.


ஹூண்டாய் இந்தியா ஊழியர் சங்கத்தின் தலைவர் முத்துகுமார் கூறுகையில், இருங்கட்டுகோட்டைக்கு (Irungattukottai) அருகிலுள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் 2400 தொழிலாளர்களில் கிட்டத்தட்ட 750 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டது.


அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்பிறகு தொழிலாளர்கள் சில காலம் விடுப்பில் அனுப்பப்பட்டனர்.  பிறகு மூன்று நாட்கள் வேலை மற்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்ற முறையில் தொழிற்சாலையில் பணிகள் தொடங்கப்பட்டன. ஒரு நாளில் 3 ஷிப்டுகளில் கிட்டத்தட்ட 1400 கார்களை உற்பத்தி செய்யும் இந்த ஆலை, தற்போது சுமார் 800 கார்களை 2 ஷிப்டுகளில் உற்பத்தி செய்கிறது.


Also Read | முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை


மறைமலை நகரில் ஒரு ஆலையை இயக்கும் ஃபோர்டு (Ford) நிறுவனத்தில், சிலிக்கான் சிப் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே பணிகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளன. அதன் 3,000 ஊழியர்களில் சுமார் 250 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. அதில் மூன்று பேர் உயிரிழந்தனர். எனவே தொழிற்சாலை முழுமையாக மூடப்பட்டது.


சென்னை ஃபோர்டு ஊழியர் சங்கத்தின் தலைவரின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகளில் சுமார் 780 கார்களை உற்பத்தி செய்யும் அவர்களின் ஆலை இப்போது அந்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு கார்களை தான் தயாரிக்கிறது. தற்போது ஒரே ஒரு ஷிப்ட் மட்டுமே வேலை நடக்கிறது.  


ரெனால்ட்-நிசான் தொழிற்சாலையில், கிட்டத்தட்ட 8000 தொழிலாளர்களில் 700 பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டனர். ஐந்து பேர் உயிரிழந்தனர். ஊழியர்கள் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை அணுகிய பின்னர், இந்த ஆலையை 75% திறனில் இயக்க முடிவு செய்யப்பட்டது.


Also Read | திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்துப் பயணம்: முதல்வர் ஸ்டாலின்


ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மூர்த்தி கூறுகையில், தற்போதைய லாக்டவுனில் நாளொன்றுக்கு 860 யூனிட்டுகளுக்கு பதிலாக 600 கார்களை உருவாக்குகிறது.


இந்த தொழிற்சாலைகளில் சொற்ப ஊழியர்களுக்கு மட்டுமே நிறுவனம் ஏற்பாடு செய்த முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நிலவும் கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகவும், தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இருக்கும் தயக்கம் காரணமாகவும் மீதமுள்ளவர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.


Also Read | தமிழ்நாட்டில் COVID-19 பரவல் வேகம் குறைகிறது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR