இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழ்நாட்டில் COVID-19 பரவல் வேகம் குறைகிறது

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இன்று 2,217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் அதிக அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அங்கு 3,061 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 2, 2021, 08:25 PM IST
இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழ்நாட்டில் COVID-19 பரவல் வேகம் குறைகிறது title=

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று புதிதாக 25,316 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல இன்று 483 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 204 பேர் தனியார் மருத்துவமனையிலும், 279 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் இறந்துள்ளனர். இன்று மட்டும் 32, 263 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்கள். 

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் இன்று 2,217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் அதிக அளவில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. அங்கு 3,061 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்த பாதிப்பு 21,48,346 ஆக உள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், இதுவரை 18,34,439 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 25,205 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ALSO READ |  தமிழ்நாட்டில் கொரோனா சிகிச்சைக்கான New Guidelines அரசு வெளியிட்டது!

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News