முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை

முன்னாள் அமைச்சர் (Former AIADMK minister) முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த வழக்கில் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 3, 2021, 05:48 PM IST
  • முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை
  • முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.
  • சென்னை நெற்குன்றத்தில் இருப்பதாக தமிழக காவல்துறையினருக்கு தகவல்
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை title=

அதிமுக முன்னாள் அமைச்சர் (Former AIADMK minister) மணிகண்டன் மீது 36 வயது நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து, சென்னை அடையார் மகளிர் காவல்நிலையத்தில், பாலியல் பலாத்காரம், மிரட்டல், பெண்ணின் அனுமதியின்றி கருச்சிதைவு மற்றும் காயத்தை ஏற்படும் வகையில் பெண்ணை தாக்கியது போன்ற ஐபிசி பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகை அளித்த தனது புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (M Manikandan) தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துக்கொள்வதாகக் கூறி 5 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பல முறை உடலுறவில் ஈடுபட்டு 3 முறை கர்ப்பமாகி கருவை கலைத்தாகவும் குற்றசாட்டி உள்ளார். பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தாக்கியதாவும், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் நடிகை (Actress Chandini) தெரிவித்துள்ளார்.

ALSO READ |  சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

இந்தப் புகாரின் அடிப்படையில், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் பலாத்காரம், பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு செய்தல், தாக்குதல், காயம் உண்டாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மறுபுறம் மணிகண்டனுக்கு, முன்ஜாமீன் வழங்கக்கூடாது என நடிகை ஆட்சேபித்து இடையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். 

மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் முன்னாள் அமைச்சருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்ற நடிகையின் மனுவை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 9 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அதுவரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவும் பிறப்பித்தார்.

ALSO READ |  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் அதிரடி நீக்கம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News