பழைய ஓய்வீதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என கோரி வருகின்றனர். காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளன. தெலங்கானாவில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதாக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தெலங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்துவோம் என்று ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.36 லட்சம் ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன


பேரணியில் உரையாற்றிய இமாச்சலப் பிரதேச முதல்வர், மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து, மாநிலத்தில் 1.36 லட்சம் அரசு ஊழியர்களை பழைய ஓய்வூதியத்தின் கீழ் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். தெலுங்கானாவிலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் மல்லு பாட்டி விக்ரமார்கா, அக்கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்கராவ் தாக்ரே ஆகியோர் கூறியதாக தெலுங்கானா தொழிலாளர்களுக்கு அவர் உறுதியளித்தார்.


தெலுங்கானாவிலும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது


அவர் கூறுகையில், 'இமாச்சலப் பிரதேசத்தில் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட்டது போல வரும் காலங்களில், தெலுங்கானா அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தவுள்ளதாக அவருடன் பேசிய பிறகு தெரிந்துகொண்டேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் முழுமையாக நிறைவேற்றுகிறது’ என்றார். நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் ஒரே இழையில் கட்டிப்போடக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, Old Pension Scheme நன்மைகள் கிடைக்கும்: இதை செய்தால் போதும்


பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?


பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பணி ஓய்வுக்கு பின், ஊழியர் சம்பளத்தில் பாதியை ஓய்வூதியமாக பெறுகிறார். பழைய ஓய்வூதியத்தின் கீழ் ஜிபிஎஃப் என்ற விதிமுறை உள்ளது. இத்திட்டத்தில், பணியாளர் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறும் வசதி உள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், அரசின் கருவூலத்தில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஊழியர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்கள் விதிகளின்படி ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்கள்.


என்பிஎஸ் திட்டத்தின் நன்மைகள்


என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதித் திட்டத்தின் கீழ், வருமான வரித் துறையின் பிரிவு 80C மற்றும் 80CCD இன் கீழ் வரி விலக்கு கோரலாம்.


என்பிஎஸ் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஓய்வூதிய நிதிகள் மற்றும் முதலீட்டு விருப்பங்களை தேர்வு செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.


இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்


ஓபிஎஸ் மற்றும் என்பிஎஸ் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், பழைய ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்பான திட்டமாகும். இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும். புதிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. இதில் நீங்கள் என்பிஎஸ்ஸில் முதலீடு செய்யும் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பெறப்பட்ட தொகை உங்களுக்கு வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | Old Pension Scheme அட்டகாசமான அப்டேட்: இவர்களுக்கு OPS கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ