PF உறுப்பினர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: விரைவில் கணக்கில் வட்டித்தொகை.... இப்படி செக் செய்யலாம்
EPF Interest Amount: PF ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் வட்டித் தொகையின் அளவு அவர்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை பொறுத்தது. இதை சில கணக்கீடுகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
EPF Interest Amount: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால், உங்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். உங்களுக்கான ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) நீண்ட நாட்களாக காத்துக்கொண்டு இருந்த ஒரு செய்தி அவர்களுக்கு கிடைக்கவுள்ளது. இது அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசாக இருக்கலாம். இன்னும் சில நாட்களில் இபிஎஃப் வட்டித் தொகையை (EPF Interest Amount) அகர்கள் தங்கள் கணக்கில் பெறக்கூடும். அரசாங்கம் வட்டித் தொகையை கூடிய விரைவில் பிஎஃப் உறுப்பினர்களின் கணக்கில் டெபாசிட் செய்யவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகை அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஒரு குறிப்பிடத்தக்க பரிசாக இருக்கும்.
இபிஎஃப் வட்டி விகிதம் (EPF Interest Rate)
2023-2024 நிதியாண்டில் 8.25 சதவீத வட்டி விகிதத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்கள் கணக்கில் வட்டித் தொகை டெபாசிட் செய்யப்படும் நாளுக்காக காத்திருக்கிறார்கள். செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வட்டிப் பணம் பிஎஃப் உறுப்பினர்களின் கணக்குகளில் டெபாசி செய்யப்பட்ம் என நம்பப்படுகின்றது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.
PF ஊழியர்களின் கணக்கில் எவ்வளவு டெபாசிட் செய்யப்படும்?
PF ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் வட்டித் தொகையின் அளவு அவர்கள் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை பொறுத்தது. இதை சில கணக்கீடுகளின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
- PF உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தால், 8.25 சதவிகித வட்டி விகிதத்தில், கணக்கில் வட்டித்தொகையாக 8.25 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.
- PF உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் 2 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தால், 8.25 சதவிகித வட்டி விகிதத்தில், கணக்கில் வட்டித்தொகையாக 16,500 கிடைக்கும்.
- PF உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் 3 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தால், 8.25 சதவிகித வட்டி விகிதத்தில், கணக்கில் வட்டித்தொகையாக 16,750 கிடைக்கும்.
- இந்தத் தொகை உங்கள் கணக்கு இருப்பில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தை அளிக்கும்.
PF உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். அதற்கான சுலபமான வழிகளை இங்கே காணலாம்.
1. இபிஎஃப்ஓ இணையதளம் (EPFO Website) மூலம் இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறை
- முதலில் https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இபிஎஃப் இணையதளத்திற்கு செல்லவும்.
- போர்டலில் லாக் இன் செய்ய வேண்டும்.
- அதில் Our Services என்ற டேபை கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு அதில் உள்ள For Employees என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பின்னர் PF Passbook View என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதில் பணியாளர்கள் இபிஎஃப் கணக்கில் உள்ள மாதாந்திர பங்களிப்புடன் மொத்த இபிஎஃப் இருப்பையும் தெரிந்துகொள்ளலாம்.
2. உமங் செயலி மூலம் இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறை
- உமங் செயலி மூலம் இருப்பை சரி பார்க்க உமங் செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
- இந்த செயலியில் பணியாளர்கள் 127 வகையான சேவைகளின் பலனைப் பெற முடியும்.
- உமங் செயலி (Umang App) இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மொபைல் செயலியாகும்.
- இந்த செயலியானது ஆல்-இன்-ஒன், சிங்கிள், யூனிஃபைட், செக்யூர், மல்டி-சேனல், மல்டி-ப்ளாட்ஃபர்ம், பல மொழி வசதிகளை ஆகியவற்றை பயனர்களுக்கு வழங்குகிறது.
- இருப்பை சரிபார்க்க முதலில் உமங் செயலியில் லாக் இன் செய்ய வேண்டும்.
- அடுத்து View Passbook என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதன் பிறகு UAN எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிடவும்.
- அதன் பிறகு, இ-பாஸ்புக்கைக் காண உறுப்பினர் ஐடியைக் கிளிக் செய்ய வேண்டும்.
3. SMS மூலம் இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறை
- இபிஎஃப் கணக்கில் உள்ள இருப்பை ஆஃப்லைனில் சரிபார்க்க விரும்பினால், பணியாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் இதை தெரிந்துகொள்ளலாம்.
- இதற்கு பணியாளர்கள் தங்கள் UAN எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
- பின்வரும் வடிவத்தில் 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்: EPFOHO UAN ENG.
- இதில் கடைசி மூன்று எழுத்துக்கள் மொழியை குறிக்கும். தமிழுக்கு EPFOHO UAN TAM என அனுப்ப வேண்டும்.
- தங்கள் கணக்கின் தற்போதைய EPF இருப்பு விவரங்களை பணியாளர்கள் தாங்கள் விரும்பும் மொழியில் பார்க்கும் விருப்பத்தை பெறுகிறார்கள்.
- பிற மொழிகளுக்கு அந்தந்த மொழியின் முதல் மூன்று எழுத்துக்களை உள்ளிட வேண்டும்.
4. மிஸ்டு கால் (Missed Call) மூலம் இபிஎஃப் இருப்பை சரிபார்ப்பதற்கான வழிமுறை
- மிஸ்டு கால் கொடுத்தும் இபிஎஃப் இருப்பை சரிபார்க்கலாம்.
- இதற்கு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வெண்டும்.
- இதற்குப் பிறகு, சில நாட்களுக்குள் உங்கள் EPF கணக்கின் இருப்பு பற்றிய தகவலை பெறலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ