இந்தியன் ரயில்வே: அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். ரயிலில் பயணம் செய்வது மக்களுக்கு எப்போதும் பிடித்தமான விருப்பமாக இருந்து வருகிறது. ரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த விதியை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த விதி பற்றிய புரிதல் உங்களுக்கு இருந்தால், உங்களால் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும். பல நேரங்களில் இந்த விதி உங்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். ரயில்வேயின் டிக்கெட் பரிமாற்ற விதியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டிக்கெட் பரிமாற்ற விதி


இந்திய ரயில்வே பயணிகளின் வசதிகளை மனதில் வைத்து அவ்வப்போது பல விதிகளை உருவாக்குகிறது. பல பழைய விதிகளில் மாற்றம் செய்கிறது. இவற்றை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த விதிகள் உங்களுக்குத் தெரியாவிட்டால், சில வசதிகள் தேவைப்படும்போது சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய விதிகளில் ஒன்று டிக்கெட்டுகளை மாற்றுவதற்கான விதி.


ஒருவரிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட் இருந்து, ஏதோ காரணத்தினால் அவரால் அந்த டிக்கெட்டில் பயணிக்க முடியவில்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில், அவர் தனது டிக்கெட்டை அவரது குடும்ப உறுப்பினர் பெயரில் மாற்றலாம். இதனால் டிக்கெட்டை கேன்சல் செய்து புதிய டிக்கெட் புக் செய்வதற்கான செலவு நீக்கப்படும். 


குடும்ப உறுப்பினர்கள் எனில் யாருக்கெல்லாம் டிக்கெட்டை மாற்ற முடியும்? 


இந்தக் கேள்விக்கு பதிலளித்த இந்தியன் ரயில்வே, இங்கு குடும்பம் என்பது நண்பர் அல்லது உறவினரைக் குறிக்காது என்று தெரிவித்துள்ளது. ரயில்வே துறை 'குடும்பம்' என்ற வார்த்தையில் அப்பா, அம்மா, சகோதரி, சகோதரர், மகள், மகன், கணவன் அல்லது மனைவியை மட்டுமே சேர்த்துள்ளது. அதாவது உங்கள் டிக்கெட்டை இவர்களில் ஒருவருக்கு மட்டுமே மாற்ற முடியும்.


மேலும் படிக்க | Indian Railways: 5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் ரயில் நிலையம் - அட எங்க இருக்கு தெரியுமா?


இந்த வசதியை எப்படி பெறுவது?


இந்தச் சேவையைப் பெற, திட்டமிடப்பட்ட ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன்னதாக பயணிகள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். டிக்கெட் பரிமாற்றத்திற்கான கோரிக்கையை ஒரு முறை மட்டுமே செய்ய முடியும் என்பதை இங்கே நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவரின் பெயருக்கு ஒரு முறை டிக்கெட் பரிமாற்றம் செய்யப்பட்டால், அந்த டிக்கெட்டை மற்றொருவரின் பெயருக்கு மாற்ற முடியாது.


டிக்கெட்டை எப்படி மாற்றுவது?


ஆஃப்லைனில் டிக்கெட் வாங்கியிருந்தால், அதை எடுத்துக்கொள்ளவும். ஆன்லைனில் கெட்டிக் புக் செய்திருந்தால், அதன் பிரிண்ட் அவுட்டை எடுத்துக்கொள்ளவும். இதற்குப் பிறகு, நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு, அருகிலுள்ள ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டருக்குச் செல்ல வேண்டும். இங்கே நீங்கள் டிக்கெட் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். 


டிக்கெட் பரிமாற்றக் கோரிக்கையை வைப்பதற்கான கால வரம்பு என்ன?


இந்திய ரயில்வேயின் வழிகாட்டுதல்களின்படி வெவ்வேறு வகைப் பயணிகளுக்கு வெவ்வேறு நேர வரம்புகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கு, ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே கோரிக்கை விடுக்க வேண்டும்.


அதேசமயம் பண்டிகை சமயங்களில், திருமண விழாக்களில் அல்லது தனிப்பட்ட விஷயங்களில், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக தனிநபர்கள் டிக்கெட் பரிமாற்றக் கோரிக்கையை வைக்க வேண்டும். இது தவிர, என்சிசி விண்ணப்பதாரர்கள் டிக்கெட் பரிமாற்ற சேவையையும் அதனுடன் தொடர்புடைய பலன்களையும் பெறலாம்.


மேலும் படிக்க | Indian Railways மாஸ் அப்டேட்: ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. மிகப்பெரிய நிவாரணம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ