Indian Railways: 5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் ரயில் நிலையம் - அட எங்க இருக்கு தெரியுமா?

Indian Railways: இந்த ரயில் நிலையம் பார்ப்பதற்கே ஒரு 5-ஸ்டார் ஹோட்டலை போல் தோற்றமளிக்கும், அதுவும் விமான நிலையத்தில் உள்ள வசதிகள் அனைத்தும் இதில் இருக்கும்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2023, 05:39 PM IST
  • இது நாட்டின் முதல் தனியார் ரயில் நிலையமாகும்.
  • இந்த ரயில் நிலையத்தின் குத்தகை 45 ஆண்டுகளுக்கு உள்ளது.
  • அடுத்த 8 ஆண்டுகளுக்கு அதன் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டிற்கும் பன்சால் குழுமம் பொறுப்பாகும்
Indian Railways: 5 ஸ்டார் ஹோட்டலை மிஞ்சும் ரயில் நிலையம் - அட எங்க இருக்கு தெரியுமா? title=

Indian Railways: பல்வேறு துறைகளை விட இந்திய ரயில்வே நாட்டிலேயே அதிகபட்ச முன்னேற்றம் அடைந்து வருகிறது. இத்துறையானது அதன் நிலையங்களை நவீனமயமாக்கும் பணியில் விரைவாக ஈடுபட்டுள்ளது. அரை அதிவேக ரயில்களை இயக்கி வருகிறது. அதே நேரத்தில், நாட்டிலேயே முதல் ஹைடெக் தனியார் ரயில் நிலையமும் கட்டப்பட்டுள்ளது, அங்கு நீங்கள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளைக் காணலாம்.

இந்த ரயில் நிலையம் பார்ப்பதற்கே ஒரு 5-ஸ்டார் ஹோட்டலை போல் தோற்றமளிக்கும். IRDC (இந்திய ரயில்வே மேம்பாட்டுக் கழகம்) படி, இந்த ரயில் நிலையம் தனியார் கூட்டாண்மை மூலம் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதல் தனியார் ரயில் நிலையம் எப்படி இருக்கிறது இங்கு காணலாம்.

பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் உள்ளது

2021ஆம் ஆண்டில், மத்திய பிரதேசத்தின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தின் பெயர் ராணி கமலாபதி ரயில் நிலையம் என மாற்றப்பட்டது. ஊடக அறிக்கையின்படி, இந்திய ரயில்வே இந்த நிலையத்தை மேம்படுத்துவதற்கான முழுப் பொறுப்பையும் பன்சால் குழுமம் என்ற தனியாருக்கு வழங்கியது. 

மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு! மேலும் 5 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்..!

நிலையத்தை நிர்மாணிப்பதைத் தவிர, அடுத்த 8 ஆண்டுகளுக்கு அதன் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டிற்கும் பன்சால் குழுமம் பொறுப்பாகும். கிடைத்த தகவலின்படி, இந்த நிலையத்தின் குத்தகை 45 ஆண்டுகளுக்கு உள்ளது.

கிடைக்கும் வசதிகள் என்னென்ன?

ராணி கம்லாபதி ரயில் நிலையத்தில், விமான நிலையத்தில் கிடைக்கும் வசதிகளை பெறுவீர்கள். விமானம் தாமதமாக வரும்போது விமான நிலையத்தில் ஷாப்பிங் செய்யலாம். இதேபோல், இந்த நிலையத்தில் நீங்கள் ஷாப்பிங் செய்ய கடைகள், உணவகங்கள், கேட்டரிங் கடைகள் ஆகியவற்றைக் காணலாம். இதுமட்டுமின்றி பெண் பயணிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையத்தில் மின்சாரத்திற்காக சோலார் பேனல்களும் நிறுவப்பட்டுள்ளன, அதில் இருந்து பெறப்படும் மின்சாரம் ரயில் நிலையத்தின் பணிகளுக்கு பயன்படுத்தப்படும். எந்தவொரு அவசர காலத்திலும் பயணிகளை 4 நிமிடங்களுக்குள் நிலையத்தில் இருந்து வெளியேறும் வகையில் இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் எந்த அவசரத்திலும் உயிரிழக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறை அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என பல்வேறு தரப்பிலான மக்கள் பயனடைந்து வரும் நிலையில், தனியாருக்கு ரயில்வே துறையை வழங்கக்கூடாது எனவும் ஒரு தரப்பினர் கோரிக்கை வைக்கின்றனர்.

தற்போது தனியாருக்கு ரயில் நிலையங்களை ஒப்படைத்தால், அதன் விலை நிர்ணயம், வசதிகளை பயன்படுத்துவதற்கான கட்டணம் என எதையும் அரசால் கட்டுப்படுத்த இயலாது எனவும் அவர் தங்களின் வாதங்களை முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Indian Railways மாஸ் அப்டேட்: ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி.. மிகப்பெரிய நிவாரணம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News