Indian Railways முக்கிய அப்டேட்: இதற்கெல்லாம் ரயிலில் அனுமதி இல்லை.. மீறினால் தண்டனை!!

Indian Railways: அடிக்கடி ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நபரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

ரயில் பயணம் மிக சுவாரசியமான ஒரு பயணமாகும். அதுவும் நாம் செல்லும் பயணம் நீண்ட தூர பயணமாக இருந்தால், அதன் சுகமே தனிதான். நீண்ட தூர ரயில் பாணங்கள் நம் அன்றாட பிஸியான வாழ்விலிருந்து ஒரு மாறுதலை அளிக்கின்றன. ஆனால், இந்திய ரயில்வேயின் சில விதிகள் நமக்குத் தெரியாவிட்டால், இந்த பயணங்களே நமக்கு சிக்கலை கொண்டுவந்து விடலாம். இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

1 /8

எதை எடுத்துச்செல்லலாம்? ரயிலில் எதை எடுத்துச் செல்லலாம், எதை எடுத்துச்செல்லக் கூடாது என்று உங்களுகுத் தெரியுமா? அதற்கான ஒரு விதி உள்ளது என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  

2 /8

ரயில்வே விதி: ரயிலில் நாம் எதை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்று அனைவரும் நினைக்கிறோம். ஆனால், அது தவறு. ரயிலில் எவற்றை எடுத்துச்செல்லக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

3 /8

ஆசிட் கூடாது: ரயிலில் ஆசிட் அதாவது எந்த விதமான அமிலத்தையும் கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு செய்தால் அதற்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளதாக parcel.indianrail.gov.in இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4 /8

கேஸ் சிலிண்டர்:பல நேரங்களில் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு கேஸ் சிலிண்டரை எடுத்துச் செல்ல ரயிலை ஒரு நல்ல வழியாகக் கருதுகிறோம். ஆனால் அப்படி செய்வது தவறு. ரயிலில் காலியாகவோ அல்லது நிரம்பியதாகவோ எந்த வகையான கேஸ் சிலிண்டரையும் எடுத்துச் செல்ல முடியாது. 

5 /8

சமைக்கப்படாத சிக்கன்: இந்திய ரயில்வேயில் சமைக்கப்படாத இறந்த கோழிகளை எடுத்துச்செல்லவும் அனுமதி இல்லை. இறந்த கோழிகளால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இது பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இவற்றால் பல நோய்களும் பரவக்கூடும்.

6 /8

பட்டாசு: பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் யாராவது பட்டாசு எடுத்துச்சென்று பிடிபட்டால் அபராதம் கட்ட வேண்டி வரும். தற்செயலாக அல்லது தெரியாமல் பட்டாசு வெடிப்பதால் பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. 

7 /8

மதுபானம்: ரயிலில் மதுபானங்களை எடுத்துச் செல்வது நீங்கள் பயணிக்கும் மாநிலத்தைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அனைத்து மாநிலங்களுக்கும் மதுபானம் தொடர்பாக அவற்றின் சொந்த விதிகள் உள்ளன. அரசியல் சட்டத்தில், மதுபானம் தொடர்பான விதிகளை அந்தந்த மாநிலங்கள் தங்கள் சொந்த விதிகளுக்கு ஏற்ப உருவாக்கலாம் என்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

8 /8

ரயிலே விதிகள்: ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த பதிவில், இந்த விதிகளில் சிலவற்றை பற்றி தெரிந்துகொண்டோம். இவற்றை நாம் தெரிந்துகொள்வதால் நமது ரயில் பயணம் மிகவும் வசதியாகவும் அழகாக மாறும்.