7th Pay Commission மாஸ் செய்தி: விரைவில் பம்பர் சம்பள ஏற்றம்... இதுதான் காரணம்!!
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் மீண்டும் ஒரு பம்பர் அதிகரிப்பு இருக்கும்.
7வது சம்பள கமிஷன் சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. சம்பள உயர்வுக்காகக் காத்திருக்கும் ஊழியர்களுக்கு கொண்டாட்டம்!! விரைவில் அவர்களது சம்பளத்தில் பம்பர் உயர்வு ஏற்பட உள்ளது. தற்போது குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்ட்ரை மீண்டும் அதிகரித்து அதன் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த அரசு பரிசீலித்து வருகின்றது. முன்னதாக அரசாங்கம் குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.6,000 லிருந்து ரூ.18,000 ஆக உயர்த்தியது. தற்போது ஊழியர்கள் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3 மடங்கு உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 க்கு மேல் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சம்பளத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு உள்ளது
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளத்தில் மீண்டும் ஒரு பம்பர் அதிகரிப்பு இருக்கும். 7வது ஊதியக் குழுவின் படி, தற்போது ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இது தவிர, சம்பளத்துடன், பல்வேறு அலவன்ஸ்களின் பலனையும் ஊழியர்கள் பெறுகின்றனர். இதில், அகவிலைப்படி (டிஏ), பயணப்படி (டிஏ), வீட்டு வாடகை கொடுப்பனவு (எச்ஆர்ஏ) உள்ளிட்ட பல வகையான கொடுப்பனவுகள் சேர்க்கப்படுகின்றன.
ஃபிட்மென்ட் ஃபாக்டரை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் அதிகரிக்கிறது. 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, சம்பள அலவன்ஸ்கள் தவிர, அடிப்படை சம்பளத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மூலமே மத்திய ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கிறது. தற்போது மீண்டும் ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் அடிப்படை சம்பளம் மற்றும் மொத்த சம்பளத்தில் ஏற்றம் இருக்கும் என்பது அவர்களது நிலைப்பாடாக உள்ளது.
சம்பளம் எவ்வளவு உயரும்?
ஏழாவது ஊதியக் குழுவின் படி, தற்போது ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆகும். இதில் மாற்றம் இருந்தால் முழு சம்பளத்திலும் மாற்றம் ஏற்படும். ஆகையால் இதை 3.68 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. தற்போது, ஃபிட்மென்ட் ஃபாக்டரின் 2.57 மடங்கு மற்றும் அடிப்படை சம்பளம் ரூ.18000 என்ற அடிப்படையில், இதர அலவன்ஸ்கள் தவிர்த்து, ரூ.18,000 X 2.57 = ரூ.46260 கிடைக்கிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 ஆக உயர்த்தப்பட்டால், மற்ற அலவன்ஸ்கள் தவிர்த்து, ஊழியர்களின் சம்பளம் 26000 X 3.68 = ரூ.95680 ஆக உயரும்.
அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை
2024 ஆம் ஆண்டில் மதிப்பாய்வு அடிப்படையில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்
ஜனவரி மாத அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது இதில் மேலும் 4 சதவீதம் அதிகரித்தால், டிஏ 46 சதவீதமாக உயரும். ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் டிஏ ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2023 இன் அகவிலைப்படி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலை 2023 இன் அகவிலைப்படி அடுத்தது அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க | 7th Pay Commission அதிரடி அப்டேட்: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ