இன்கம் டேக்ஸ் ரீப்ஃண்ட் முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் ரீஃபண்ட் கிடைக்காது
Income Tax Refund: வருமான வரி ரீப்ஃண்ட் யாருக்கு கிடைக்கும்? இந்த ரீஃபண்ட் நமக்கு எப்போது கிடைக்கும்? இது கிடைக்காவிட்டால் நாம் இதை எப்படி பெறுவது?
வருமான வரி அறிக்கை: கோடிக்கணக்கான மக்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்துள்ளனர். இப்போது மக்கள் வருமான வரி ரீஃபண்டுக்காக காத்திருக்கின்றனர். வருமான வரி ரீஃபண்டு குறித்து பலருக்கு பல சந்தேகங்களும் உள்ளன. இன்கம் டேக்ஸ் ரீப்ஃண்ட் யாருக்கு கிடைக்கும்? இந்த ரீஃபண்ட் நமக்கு எப்போது கிடைக்கும்? இது கிடைக்காவிட்டால் நாம் இதை எப்படி பெறுவது? இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வருமான வரி ரீஃபண்ட் பெற தகுதியுடையவர் யார்?
குறிப்பிட்ட நிதியாண்டில் (FY) ஒருவர் தனது மதிப்பிடப்பட்ட அளவை விட அதிக வரியைச் செலுத்தும் போது, வரி செலுத்திய நபருக்கு திருப்பி அளிக்கப்படும் அந்த கூடுதல் தொகை வருமன வரி ரீஃபண்ட் எனப்படும். நீங்கள் கட்டாய அட்வான்ஸ் வரியைச் செலுத்தும்போது அல்லது உங்கள் வருமானத்தில் TDS விலக்குகளைப் பெற்றிருந்தால் வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கும்.
வருமான வரி ரீஃபண்டில் தாமதம்
வருமான வரி ரீஃபண்ட் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறதா? முதலில் உங்கள் ஐடிஆர் -ஐ ஈ-வெரிஃபை செய்து விட்டீர்களா என்பதை சரிபார்க்கவும். உங்கள் ஐடிஆர் -ஐ ஈ-வெரிஃபை செய்யவில்லை என்றால், வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை முழுமையடையாததாகக் கருதப்படும். அப்படிப்பட்ட நிலையில் உங்கள் ஐடிஆர் செல்லாது. ஆகையால், முதலில் நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கைச் சரிபார்ப்பது நல்லது.
வருமான வரி ரீஃபண்ட்
உங்கள் ஐடிஆர் செயலாக்கப்பட்டவுடன் உங்கள் ரீஃபண்டை பெறுவீர்கள் (பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள்). பொதுவாக ரீஃபண்ட் உடனடியாக வருவதில்லை. வருமான வரித் துறையின் மூலம் ஏற்கனவே செலுத்தப்பட்ட வரி விவரங்களை அதனுடன் உள்ள தகவல்களுடன் சரிபார்த்த பிறகு உங்களுக்கு இந்த ரீஃபண்ட் வழங்கப்படும். வருமான வரித் துறையின் செய்திக்குறிப்பின்படி, 61% மின் சரிபார்க்கப்பட்ட வருமானங்கள் ஏற்கனவே செயலாக்கப்பட்டுள்ளன. அதாவது, செயலாக்கம், ரீஃபண்ட் அல்லது சரிசெய்தல் என அவரவருக்கு பொருந்தக்கூடிய அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. எல்லாம் சரியாக இருந்தால், உடனடியாக ரீஃபண்ட் அனுப்பப்படுகின்றது. செயலாக்கத்திற்குப் பிறகு 10 நாட்கள் முதல் 2 வாரங்களுக்குள் இந்த வேலை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | உங்கள் டிடிஎஸ் பணத்தை இந்த வழிகளில் எளிதாக திரும்ப பெறலாம்!
வருமான வரி தாக்கல்
உங்கள் ஐடிஆர் -ஐத் தாக்கல் செய்து சரிபார்த்த பிறகு பணத்தைத் திரும்பப் பெற பொதுவாக 20-45 நாட்கள் ஆகும். இருப்பினும், இந்த 2022-23 நிதியாண்டில், மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருமான வரிக் கணக்கு (ITR) தாக்கலில் செயல்முறையை வரித்துறை துரிதப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, சராசரி செயலாக்க நேரம் வெறும் 16 நாட்களாக வெகுவாகக் குறைந்துள்ளது. மறுபுறம், உங்கள் வருமான வரி ரீஃபண்ட் வர வேண்டுமானால், உங்கள் வருமான வரி ரீஃபண்ட் ஸ்டேடசை நீங்கள் தொடர்ந்து செக் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வருமான வரி ரீஃபண்ட் நிலையை ஆன்லைனில் இப்படி செக் செய்யலாம்:
- இன்கம் டேக்ஸ் இந்தியாவின் இணையதளத்திற்குச் செல்லவும்.
- உங்கள் பயனர் ஐடி (பான் எண்), கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.
- 'ரிடர்ண் / படிவம் காண்க’ என்பதற்குச் செல்லவும்.
- ‘ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடு' என்பதைக் கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து 'வருமான வரி ரிட்டர்ன்' என்பதைக் கிளிக் செய்யவும்.
- மதிப்பீட்டு ஆண்டை பூர்த்தி செய்து பின்னர் சமர்ப்பிக்கவும்.
- உங்கள் ஐடிஆர் ரீஃபண்ட் நிலையைச் சரிபார்க்க தொடர்புடைய ஐடிஆர் ஒப்புகை எண்ணைக் கிளிக் செய்யவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ